ஓய்வூதியர்களின் உணர்வுகளை மதித்து, அவர்களது சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதில் அநுர அரசாங்கம் அக்கறையின்றி செயற்படுவதாக இலங்கை சுதந்திர ஓய்வூதியர் சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம். முக்தார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;
அரச ஊழியர்களுக்கு 2025 ஏப்ரலில் முதற்கட்ட சம்பள அதிகரிப்பை வழங்கிய அரசு, அதன் இரண்டாம் கட்டத்தை 2026 ஜனவரியில் வழங்கவுள்ளது. ஆனால் 2019 ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வுபெற்ற அரச ஓய்வூதியர்களுக்கான முதலாம் கட்ட
ஓய்வூதிய அதிகரிப்பை கடந்த ஜூலை மாதத்திலேயே வழங்கியது. எனினும் அது இன்னும் பலருக்கு இதுவரை கிடைக்கப் பெறாத நிலையும் உள்ளது.
இந்நிலையில் ஓய்வூதியர்களுக்கான இரண்டாம் கட்டத்தை எதிர்வரும் 2026 ஜுலை மாதம் முதல் வழங்கப் போவதாக பட்ஜெட் உரையில் ஜனாதிபதி அறிவித்த விடயமானது கவலையளிக்கிறது.
இக்கொடுப்பனவை அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் வழங்க இருப்பது போல் அரச ஓய்வூதியருக்கும் ஜனவரி முதல் வழங்க வேண்டியது அரசின் பொறுப்பாகும். .அரச ஊழியர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் தான் அரச ஓய்வூதியர்களுக்கும் உள்ளது என்பதை ஜனாதிபதியும் நிதியமைச்சு அதிகாரிகளும் உணர வேண்டும்.
சேவையில் உள்ள அரச அலுவலர்களை விட கண்ணியமாக முன்னிலை கொடுத்து நடாத்தப்பட வேண்டியவர்கள் ஓய்வூதியர் என்பதையும் இவர்கள் நாட்டுக்காக சேவையாற்றியோர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்- என்று அவர் மேலும் தெரிவித்தார்.
.jpg)
0 comments :
Post a Comment