கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த வியாபாரிக்கு தண்டப்பணம் விதிப்பு



பாறுக் ஷிஹான்-
ரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனையில் ஈடுபட்ட வியாபாரிக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் கல்முனை நீதவான் நீதிமன்று விதித்துள்ளது.

இன்று (16) குறித்த வழக்கு அம்பாறை மாவட்ட செயலக பாவனையாளர் அதிகார சபையினால் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து கல்முனை பிரதேசத்தில் உள்ள குறித்த வியாபார நிலைய உரிமையாளருக்கு அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை நீதவான் நீதிமன்று ரூபா 100,000 அபராதம் விதித்துள்ளது.

அண்மையில் அம்பாறை மாவட்ட செயலக பாவனையாளார் அலுவல்கள் அதிகார சபையினால் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது அரசாங்க கட்டுப்பாட்டு விலைக்கு அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த வியாபார நிலையங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன.

இதன் அடிப்படையில் குறித்த வியாபார உரிமையாளருக்கு எதிராக அதிகார சபையின் புலானாய்வு உத்தியோகதர்கள் வழக்குத்தாக்கல் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :