நிகழ்வு பேராசிரியர் ஏ. டி. என். டி. குமாராவின் வரவேற்பு உரையுடன் ஆரம்பமாகியது. பின்னர் மாநாட்டுத் தலைவர் கலாநிதி யூ. எல். அப்துல் மஜீத் உரையாற்றினார்.
முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் “விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கிய பங்கு நிலைபேறான வளர்ச்சியை நோக்கி உலகை முன்னேற்றுவதில் முக்கியம்” என்ற கருத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.
பிரதான உரையாளர்கள் (Keynote Speakers)
இம்மாநாட்டில் இரண்டு முக்கிய வெளிநாட்டு அறிஞர்கள் தமது பிரதான உரைகளை (Keynote Address) வழங்கினர்:
1. பேராசிரியர் பி. அப்துல் சலாம், School of Environment, Resources and Development, Asian Institute of Technology, தாய்லாந்து.
2. பேராசிரியர் ஹுடா பின்தி ஹாஜி இப்ராஹிம், Assistant Vice-Chancellor, College of Arts and Sciences, University Utara Malaysia.
பிரதான உரையாளர்களின் அறிமுக உரைகளை மாநாட்டின் இணைப்பாளர் பேராசிரியர் ஏ.டி.என்.டி. குமாரா மற்றும் மாநாட்டின் செயலாளர். எச். ஏ. பி. டபிள்யூ. ஹெட்டியாரச்சி நிகழ்த்தினர்
நிகழ்வின் நிறைவு உரையாக எம். எஸ். எஸ். ரஷீத் உதவி செயலாளர், நன்றி தெரிவிக்கும் உரை அமைந்திருந்தது.
மாநாட்டின் கல்வி மற்றும் ஆராய்ச்சி அம்சங்கள்
ICST 2025 மாநாடு புதுமை, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தின் பரிமாற்றத்திற்கான ஒரு முக்கிய தளமாக விளங்கியது. மொத்தம் 48 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில், 40 கட்டுரைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இது மாநாட்டின் கல்விசார் தரத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய அடையாளமாக அமைந்தது.
உப வேந்தர் பேராசிரியர் ஜுனைடீன் தனது உரையில் கூறியதாவது:
“இம்மாநாட்டின் கருப்பொருள் ‘Innovative Approaches for a Sustainable Future’ என்பது நம்முடைய கூட்டு உறுதியையும் எதிர்கால தலைமுறைகளுக்கான பொறுப்பையும் பிரதிபலிக்கிறது. உலகம் இன்று பல்வேறு சவால்களை சந்திக்கிறது — சுற்றுச்சூழல் பாதிப்பு, காலநிலை மாற்றம், வளங்களின் தட்டுப்பாடு போன்றவை. இவற்றை சமாளிக்க விஞ்ஞான, தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் ஒருங்கிணைய வேண்டும்,” என தெரிவித்தார்.
“தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஐ.நா. வின் நிலைபேறான வளர்ச்சி இலக்குகள் (SDGs) உடன் ஒத்திசைந்து, புதுமை மற்றும் ஆய்வுக்கான பண்பாட்டை வளர்த்தெடுக்கும் நோக்குடன் செயல்படுகிறது. இந்த மாநாடு கல்வியியல் சமூகத்தை இணைக்கும் ஒரு வலுவான பாலமாக இருக்கும்.” என்றும் தெரிவித்தார்.
மாநாட்டுத் தலைவர் கலாநிதி அப்துல் மஜீத் தமது உரையில்: தொழில்நுட்பத்தின் உலகளாவிய மாற்றங்களை எடுத்துக்கூறி, சீனாவின் ரோபோடிக் தொழிற்துறை வளர்ச்சி, மின்சார வாகனங்கள், மற்றும் தானியக்கமயமான உற்பத்தி முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
“இன்று உலகம் தொழில்நுட்பம் மற்றும் புதுமையால் வழிநடத்தப்படுகிறது. ஆனால் நமது நாட்டின் பொருளாதார கட்டமைப்பு இன்னும் பாரம்பரிய தொழில்களில் அடிப்படையாக உள்ளது. நமது எதிர்கால வளர்ச்சி ஆராய்ச்சி, புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் வழியாக மட்டுமே சாத்தியமாகும். இல்லையெனில் நாம் மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.” என்று தெரிவித்தார்.
பேராசிரியர் பி. அப்துல் சலாம் அவர்களின் உரை – “Global Challenges and Technological Solutions”
பேராசிரியர் சலாம் அவர்கள் உலகளாவிய சவால்களை விரிவாக எடுத்துரைத்தார். “உலகளவில் வருடத்திற்கு 50 பில்லியன் டன் கார்பன் டையாக்சைடு வெளியிடப்படுகிறது. இதனை 2030க்குள் பாதியாகக் குறைக்காவிட்டால் 1.5°C வெப்ப உயர்வு தாண்டும்,” என அவர் எச்சரித்தார்.
தொடர்ந்து உரையாற்றும்போது:
• உலக மக்களில் 10% பேருக்கு மின்சாரம் கிடையாது.
• 2.6 பில்லியன் பேர் இன்னும் மரவாயு எரிபொருளை பயன்படுத்துகின்றனர்.
• 2050க்குள் மின்சாரம் தேவையுடையோர் எண்ணிக்கை 2.5 பில்லியனாக உயரும்.
இந்த நிலையை மாற்ற “புதிய ஆற்றல் மூலங்கள் – சூரிய, காற்று, நீர்வழி, உயிர்ச்சக்தி – ஆகியவற்றை வேகமாக விரிவாக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
அவர் கூறியதாவது, “விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் ஒன்றிணைந்து, மனிதநேயம் சார்ந்த புதுமைமிக்க தீர்வுகளை வழங்கும் போது மட்டுமே நிலைத்த எதிர்காலம் சாத்தியமாகும்.” என்று கூறினார்.
பேராசிரியர் ஹுடா பின்தி ஹாஜி இப்ராஹிம் அவர்களின் உரை – “Science and Technology as Catalysts for Sustainable Resilience”
மலேசியாவின் University Utara Malaysia-யின் உதவி உபவேந்தர் பேராசிரியர் ஹுடா பின்தி ஹாஜி இப்ராஹிம் அவர்கள், “நிலைத்தன்மை என்பது ஒரு ஆராய்ச்சி துறை மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை தத்துவம்” எனத் தொடங்கினார்.
“சுற்றுச்சூழல் மாற்றங்கள், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகள் இனி தொலைவில் இல்லை; அவை நம்மை நேரடியாக தாக்குகின்றன. அதனால் நமது பதிலளிப்பு முறைகள் விஞ்ஞான, தொழில்நுட்பம் மற்றும் சமூக ஒத்துழைப்புடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.”
அவர், எடுத்துக்காட்டாக மலேசியாவில் வெள்ளப்பெருக்கு முகாமைத்துவத்துக்காக டிஜிட்டல் டாஷ்போர்டு முறைமை உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இது நேரடியாக நீர்மட்டத்தைக் கண்காணித்து, சமூக தலைவர்களுக்கு முன்னறிவிப்பு வழங்குகிறது.
அவர் மேலும், “நமது பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு பாடத்திட்டமும் எந்த Sustainable Development Goal (SDG) உடன் இணைந்துள்ளது என்பதை அடையாளப்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது,” எனக் கூறினார்.
அவர் தனது உரையை முடிவுறுத்துகையில், “நிலைபேறான தன்மை என்பது சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல; அது மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை வேண்டிய ஒரு நெறிமுறைப் பொறுப்பு. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சமூகங்களை மாற்றும் சக்தி கொண்டவை,” என வலியுறுத்தினார்.
நிகழ்வின்போது பேராசிரியர் எம்.எம். பாஸில், பீடாதிபதி, கலை மற்றும் கலாச்சார பீடம், பேராசிரியர் எம்.ஏ.எல். அப்துல் ஹலீம் பீடாதிபதி பொறியியல் பீடம், பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா பீடாதிபதி, முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடம், எம்.ஐ. நௌபர், பதில் பதிவாளர், சி. எம். வன்னியாரச்சி, பதில் நிதியாளர், எம்.எம். றிபாஉத்தீன், நூலகர் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தோர், நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், அனுசரணையாளர்கள், மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மாநாட்டு குழுவினர்: (Conference Steering Committee)
தலைவர் – கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், ஒருங்கிணைப்பாளர் – பேராசிரியர் ஏ.டி.என்.டி. குமாரா, செயலாளர் –எச்.ஏ.பி.டபிள்யூ. ஹெட்டியாரச்சி, பொருளாளர் ஏ. பாத்திமா முஸ்பிரா, உதவி செயலாளர் –எம். எஸ். எஸ். ரஷீத் ஆகியோரும் Track Coordinators எனப் பொறுப்பேற்றவர்கள் Animal Science, Agriculture Economics, Biosystems Engineering, Computing, Crop Science, Data Science & AI, Food Technology, Multimedia & Gaming, Network Security ஆகிய துறைகளின் நிபுணர்கள். மேலும். ஆர்.கே. அஹ்மத் றிபாய் காரியப்பர் மற்றும் பேராசிரியர் எம்.எம். மூனீப் ஆகியோரும் குழுவில் இருந்தனர்.
Editorial Team: பிரதம ஆசிரியர் – கலாநிதி ஐ.எம். கலித், இணை ஆசிரியர் – மிஸ்.ஏ.ஆர். பாத்திமா ஷபானா அவர்களுடன் பணியாற்றிய ஆசிரியர் குழுவினர் மாநாட்டின் ஆவணங்கள் மற்றும் வெளியீடுகளை உயர்தரமாக வடிவமைத்திருந்னர்.
நிகழ்வின்போது உபவேந்தர், விஷேட பேச்சாளர்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கு ஞாபகச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் சிறப்பம்சங்களில் ஒன்றாக, பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தின் சாதனைகள், ஆராய்ச்சி முயற்சிகள் மற்றும் கல்வி முன்னேற்றங்களை வெளிக்கொணரும் வகையில் சிறப்பு News Letter ஒன்றும் வெளியிடப்பட்டது. இது பீடத்தின் வளர்ச்சிப் பயணத்தையும் எதிர்கால நோக்கங்களையும் வெளிப்படுத்திய முக்கிய நிகழ்வாக அமைந்தது.
நிகழ்வை முழுமையாக தகவல் தொழில்நுட்பத் துறையின் விரிவுரையாளர் ஏ. பாத்திமா ஷர்பான தொகுத்து வழங்கினார். இங்கு பல்கலைக்கழக அக்னி கலாசார குழுவினரின் நடன நிகழவுகளும் இடம்பெற்றன.
ICST 2025 மாநாடு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி, புதுமை மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் உறுதியான வெளிப்பாடாக அமைந்தது. இது மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒரே மேடையில் சந்தித்து, புதிய யோசனைகள் மற்றும் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வழிவகுத்தது.
இந்த மாநாடு “விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்தின் வழியாக நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்குவது” என்ற நோக்கில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பை உறுதியாக உறுதிப்படுத்தியது.

0 comments :
Post a Comment