முன்னாள் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மறைந்த சோமசுந்தரம் சேனாதிராஜா( மாவை சேனாதிராஜா) அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக காரைதீவு எங்கும் அஞ்சலி பதாதைகள் பறக்க விடப் பட்டுள்ளன.
காரைதீவு விபுலானந்த சதுக்கத்தில் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வானது இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேசக்கிளை தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ஏற்பாட்டில் தலைமையில் இடம்பெற்றது.
அஞ்சலி நிகழ்வில் காரைதீவுக்கிளையின் உபதலைவர் உபசெயலாளர் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் , கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment