மாற்றம் சம்மாந்துறை அமைப்பின் "கல்விக்கான கரம்" வேலைத் திட்டத்தின் கீழ் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சம்மாந்துறை அல் மனார் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் ஏ. சித்தி நபீறா தலைமையில் இன்று (31) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சம்மாந்துறை அல் மனார் முஸ்லிம் வித்தியாலயத்தில் முஹம்மட் அசாப் பாத்திமா லசீறா 161, சம்சார் ஆலியா மர்யம் 159, முஹம்மது லுக்மான் மலீஜத்துன் நபாஹா 146, முபாறக் முஹம்மட் றசாத் 140 ஆகிய மாணவர்கள் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் கௌரவித்து மாற்றம் சம்மாந்துறை அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு, மாற்றம் சம்மாந்துறை அமைப்பின் ஸ்தாபக பணிப்பாளரும் தேசிய அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தருமான அஸாறுடீன் சலீம், சம்மாந்துறை அல் மனார் முஸ்லிம் வித்தியாலயத்தின் வகுப்பாசிரியர் எம்.எச். நைறோஸ் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment