ஒருங்கிணைந்த தமிழர் பேரவை மற்றும் வெளிநாட்டில் வாழும் தமிழர் நலன்புரிச்சங்கம் இணைந்து நடாத்திய கத்தார் தமிழன் விருது 2024 வழங்கும் விழாவில் இலங்கை - அம்பாறை மாவட்ட மீனோடைக்கட்டைச் சேர்ந்த நியாஸ்தீன் பாத்திமா நிலோஜா என்ற இளம் ஊடக செயற்பாட்டாளருக்கு Media influencer என்ற விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
ஒருங்கிணைந்த தமிழர் பேரவை மற்றும் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் நலபுரிச்சங்கம் இணைந்து வழங்கிய கத்தார் தமிழன் விருது விழா
17ஆம் திகதி சனிக்கிழமை துமாமா ICBF காஞ்சனா மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்த சித்ரா சீதாராமன், இலங்கை - மீனோடைக்கட்டைச் சேர்ந்த இளம் ஊடக செயற்பாட்டாளரான நியாஸ்தீன் பாத்திமா நிலோஜாவுக்கு Media influencer என்ற விருதை வழங்கி பொன்னாடையும் போர்த்தி கெளரவித்தார்.
இவ்விழாவில் கத்தாரில் நாட்டின் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment