தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்ற மல்வத்தை வைத்தியசாலையை வாழ்த்தி பாராட்டும் பெருவிழா!



வி.ரி. சகாதேவராஜா-

தொற்றா நோய் சம்பந்தமான கிளினிக் செய்வதில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்ற மல்வத்தை வைத்தியசாலை சமூகத்தை வாழ்த்திப் பாராட்டும்விழாவும் அங்கு சேவையாற்றி இடமாற்றலாகிச் செல்லும் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏஜிசிஎஸ். அங்குளுககா சமத்திற்கான சேவை நலன் பாராட்டு விழாவும் மல்வத்தை பிரதேச வைத்தியசாலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

மல்வத்தை பிரதேச மக்களும் மல்வத்தை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரும் ஏற்பாடு செய்த இந் நிகழ்வு அபிவிருத்தி குழுவின் உபதலைவர் பொன்.நடராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் டாக்டர் திருமதி றித்மந்தி ரத்னாயக்க தாதிய உத்தியோகத்தர்களான திருமதி ரி.பிரசாந்தி செல்வி. யுஎம். லக்ஷாணி ஜயவர்தன செல்வி என்.நிலக்ஸிகா மற்றும் ஊழியர்கள் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரும் கலந்து கொண்டனர்.

மல்வத்தை பிரதேச வைத்தியசாலையில் இருந்து இடமாற்றம் பெற்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு செல்லும் வைத்தியர் சமத்திற்கு
பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி பிரியாவிடை விமரிசையாக நடைபெற்றது.

அதேவேளை, உலக வங்கியின் அனுசரனையுடன் இணைந்து இளவயது மரணங்களை தடுக்கும் முகமாக 35 வயதுக்கு 65 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு இடையே தொடற்றா நோய்களை கண்டறிந்துசிகிச்சை அளிக்கும் முகமாக செயல்படுத்தப்படும்
PSSP நிகழ்ச்சி திட்டத்தில் குறுகிய கால இடைவேளையில்
அதிகளவான சனத்தொகையினரை உள்வாங்கி செயல்திட்டத்தை திறம்பட செய்தமைக்காக அகில இலங்கை ரீதியில்மல்வத்தை பிரதேச வைத்தியசாலையானது தங்கப் பதக்கத்தை பெற்று முதலிடத்தை தனதாக்கிக் கொண்டது.
தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றமைக்காக பாராட்டி கௌரவித்து வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

வைத்தியசாலை பொறுப்பு தாதிய உத்தியோகத்தர் திருமதி.த.பிரசாந்தி "இந்த நிகழ்ச்சி திட்டத்தை வெற்றிகரமாக எவ்வாறு கொண்டு செல்லப்பட்டது" பற்றிய விரிவான விளக்கம் அனைவருக்கும் மிகத் தெளிவாக வழங்கினார்.

அபிவிருத்தி குழுவின் செயலாளரும் சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் உப தவிசாளருமான வெ.ஜெயச்சந்திரன் பிரதான உரையாற்றினார்.

வைத்தியசாலை பொறுப்பு அதிகாரிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் அவருடைய சேவையை பாராட்டி அவருக்கு நினைவுச் சின்னமும் மல்வத்தை பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரினால் வழங்கப்பட்டது பொதுமக்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :