நாட்டை பொறுப்பேற்ற எவரும் முன்வறாத தருனத்தில் அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றிருக்காவிட்டால் பாராளுமன்ற கட்டிடம் அழிக்கப்பட்ட, இன்ற பாராளுமன்ற கூட்டம் மரத்தடியில் தான் கூடி வேண்டியிருக்கும் என்ற நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
அதன் பின்னரான இரண்டு வருடங்களில் நாடு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டுள்ளதை புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்துவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிதி நிலைமை குறித்த அறிக்கையானது பொருளாதாரத்தின் விதிவிலக்கான வளர்ச்சி குறித்த புள்ளிவிபரங்களை முன்வைத்துள்ளதாக குறிப்பிட்டார். 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், பொருளாதார வளர்ச்சி, சுற்றுலாத் தொழில், மாற்று விகிதம், சுற்றுலா வருவாய் மற்றும் அரசாங்க வருவாய் ஆகியவை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் நுழைந்த சாம்பியா, கானா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் ஒப்பீட்டு நிலைமையை முன்வைத்த அமைச்சர், இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை வெளிப்படுத்தினார். திட்டம் தொடங்கப்பட்ட போது ஜாம்பியாவில் 24.6% ஆக இருந்த பணவீக்க விகிதம் இன்னும் 15.2% ஆக உள்ளது என்று அமைச்சர் கூறினார். 69% ஆக இருந்த பணவீக்க தற்போது வீதத்தை 1.7% ஆக குறைக்க இலங்கை முடிந்துள்ளதாக அமைச்சர் கூறினார். இந்த மூன்று நாடுகளுடன் ஒப்பிடும் போது பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் இலங்கை சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்..
0 comments :
Post a Comment