ஓய்வு நிலை சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா



பாறுக் ஷிஹான்-
ற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷனின் பணிப்பாளர் சீ. எம். ஹலீம் தலைமையில் "ஓய்வு நிலை சாதனையாளர்கள் பாராட்டு நிகழ்வு" ஞாயிற்றுக்கிழமை(4) சவளக்கடை றோயல் கார்டனில் இடம் பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும், மயோன் கல்வித்திட்ட மற்றும் சமூக அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபா கலந்து கொண்டார்.

அதிதிகள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.பின்னர் கிராஅத், வரவேற்புரை ,வரவேற்பு கீதம், பிரதம அதிதியினால் பள்ளிவாசலுக்கு மின் குமிழ் கையளிக்கப்பட்ட நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது நற்பிட்டிமுனை பிரதேசத்தில் உள்ள ஓய்வு நிலை சாதனையாளர்களுக்கு கௌரவமும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத் தொகுதியின் அமைப்பாளரும் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான சீ. எம். முபீத் மற்றும் அல் - கரீம் பவுண்டேஷனின் உறுப்பினர்களும் இன்னும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.




























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :