ரணிலின் கல்முனை தேர்தல் தொகுதி முகவராக ஏ.எம்.ஜெமீல் நியமனம்!



னாதிபதி ரனில் விக்ரமசிங்கவின் தேர்தல் விவவகாரங்கள் மற்றும் கொள்கைகளை மக்கள் மயப்படுத்தும் செயற்பாடுகளுக்கு கல்முனை தேர்தல் தொகுதியின் முகவராக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாணசபை குழுக்களின் தலைவருமான ஏ.எம். ஜெமீல் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக களத்தில் இறங்கியுள்ள ஜெமீல், கல்முனை பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பல்வேறு குழுக்களையும் தனிநபர்களையும் சந்தித்து நாட்டில் கடந்தகாலத்தில் இடம்பெற்ற அசாதாரண நிலவரங்களையும் அவற்றை நிவர்த்திக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முன்னெடுப்புக்கள் குறித்தும் ஜனாதிபத்திக்கு உள்ள சர்வதேச தொடர்புகள் மற்றும் தற்போதுள்ள நாட்டின் நிலையை நேரான வளிக்குக்கொண்டுசெல்ல ரணில் விக்கிரமசிங்கவினை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கி வருகின்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் அம்பாறை மாவட்டத்திற்கு தொகுதி ரீதியாக தமது அதிகாரமளிக்கப்பட்ட தேர்தல் முகவர்களை நியமித்துள்ளனர்.

சுயாதீன வேட்பாளரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அம்பாறை தொகுதிக்கான முகவராக முன்னாள் பிரதி அமைச்சர் அனோமா கமகே,

கல்முனைத் தொகுதி முகவராக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் குழுத் தலைவர் ஏ.எம். ஜெமீல், சம்மாந்துறை தொகுதி முகவராக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் எம். முஷாரப், பொத்துவில் தொகுதி முகவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் அம்பாறை தொகுதிக்கான முகவராக நாடாளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ,

கல்முனைத் தொகுதி முகவராக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், பொத்துவில் தொகுதி முகவராக நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், சம்மாந்துறை தொகுதி முகவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஐ.எம். மன்சூர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :