வாகனமொன்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டதற்மைய முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று(27) உத்தரவிட்டுள்ளது.
அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டார்.
அத்துடன், பிரதிவாதிக்கு 04 இலட்சம் ரூபா அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெதர்லாந்து அரசாங்கத்தினால் இடர் முகாமைத்துவ நிலையத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஜீப்பை தமது தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியமை, வாகனத்தின் பராமரிப்புப் பணிகளுக்காக 10 இலட்சம் ரூபா அளவிலான தொகையை அமைச்சின் நிதியில் இருந்து செலவிட்டமை உள்ளிட்ட 04 குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சரான ஏ.எச்.எம் பௌஸிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை அறிவித்து நீதிபதி இந்தத் தண்டனையை விதித்துள்ளார்.
இவ்வழக்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்திருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment