ஏட்டுலா கனவாக்கத்தின் வெளியீட்டில் அக்கரைப்பற்று முபீதா அமீன் எழுதிய நிதர்சனதத்தின் நிழல் கவிதை நூல் வெளியீடுநூருல் ஹுதா உமர்-
லைமறைகாயாக ஒளிந்திருப்பவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களது எழுத்தாக்கத்திற்கு உயிரூட்டும் வகையில் செயல்பட்டு வரும் ஏட்டுலா கனவாக்கத்தால் வெளியிடப்பட்ட அக்கரைப்பற்று முபீதா அமீன் எழுதிய அவரது கன்னிப் படைப்பான "நிதர்சனத்தின் நிழல்" கவிதை நூல் வெளியீட்டு விழா அக்கரைப்பற்று கலை இலக்கிய பேரவையின் தலைவர் கலாபூசனம் மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கலாச்சார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் கலந்து சிறப்பிதத்துடன், ஓய்வுநிலை நில அளவையாளர் ஏ.எல்.மொஹிதீன் பாவா, அக்கரைப்பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி என்.நவப்பிரியா ஆகியோரும் மற்றும் பல இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :