சுமார் 11 வருடங்களின் பின்னர் மத்திய மாகாணத்தில் களை கட்டிய மத்திய மாகாண இஸ்லாமிய தின விழாஅஸ்ஹர் இப்றாஹிம்-
த்திய மாகாண கல்வித் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்த மத்திய மாகாண இஸ்லாமிய தின விழா அக்குறணை பாளிகா மகளிர் கல்லூரி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

மத்திய மாகாண முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் உனைஸ் ஆரிப் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் எம். ஜீ. அமரசிரி பியதாச பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

மத்திய மாகாணத்தில் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ.எல். சாருடீன் மற்றும் மத்திய மாகாண கல்வி நிர்வாகத்துக்குப் பொறுப்பான முன்னாள் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி சீ.ரி.ஜி. மாயாதுன்ன ஆகியோர் கெளரவ அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
பிரிகேடியர் திலக் மாயாதுன்ன விசேட அதிதியாகக் கலந்து கொண்டதுடன் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், வலய இணைப்பாளர்கள், மத்திய மாகாண பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட சகல இனங்களையும் சார்ந்த பலரும் கலந்து சிறப்பித்தனர்.

2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மீலாத் தின போட்டிகளில் மாகாண மட்ட வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. மாகாண மட்ட மீலாத் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்து சமயத்தைச் சார்ந்த இரண்டு மாணவர்கள் விசேட பரிசு வழங்கி கௌரவிக்கப் பட்டமை விசேட நிகழ்வாகும்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அதிதிகள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு புனித அல்குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதிகள் வழங்கப்பட்டதுடன் கலந்து கொண்ட சகோதர இன பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்களுக்கு இஸ்லாம் தொடர்பான அடிப்படை விளக்கம் அடங்கிய நூல்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டமை பாராட்டத்தக்க விடயமாகும்.

சுமார் பதினொரு வருடங்களின் பின்னர் நடைபெற்ற இந்நிகழ்வு மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :