உங்கள் வெற்றிக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் : தமிழக முதல்வருக்கும், இந்திய எம்.பி க்களுக்கும் ஹரீஸ் எம்.பி வாழ்த்து !நூருல் ஹுதா உமர்-
மிழகத்தில் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்று இமாலய சாதனை படைத்திருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், கழக தலைவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகளுக்கும் வெற்றி பெற்று மீண்டும் பாராளுமன்றம் செல்லும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கும், ராமநாதபுரத்தில் இருந்து மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று இருக்கும் அன்பு சகோதரர் கே. நவாஸ்கனி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம். முஹம்மட் ஹரீஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பலம் பொருந்திய எதிர்க்கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து நீங்கள் பெற்றிருக்கும் மக்கள் ஆணை உங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதுவரை காலமும் மக்களுக்கு நீங்கள் வழங்கிய சேவைக்கு கிடைத்த வெற்றியாக மட்டுமின்றி உங்கள் மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியாகவே இதனை நோக்கவேண்டியுள்ளது.

திடமான கொள்கை கொண்டு உயரிய மக்கள் பணியை சிறப்பாக செய்ய உங்களுக்கு இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும், மன உறுதியையும் வழங்க பிரார்த்தனை செய்கிறேன் என்றும் உங்கள் வெற்றிக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் என தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :