ஜப்பானில் கட்டப்பட்ட முதல் தேரவாத விகாரைக்கு நாற்பது ஆண்டுகள்...



முனீரா அபூபக்கர்-
ப்பான் இலங்கை நட்புறவின் உண்மையான பாலமாக ஜப்பானின் சவாராஹி லங்கா ஜீ விகாரையைச் சுட்டிக்காட்ட முடியும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

லங்கா ஜீ விகாரை பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

இந்த விகாரை தற்போது ஜப்பானுக்கு வரும் பல இலங்கையர்களுக்கு உதவியும், வழிகாட்டுதலும், பலருக்கு வழிபடும் புனிதத் தலமாகவும் மாறியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜப்பானில் உள்ள லங்கா ஜீ விகாரையின் 40வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் சவாராஹி லங்கா ஜீ விகாராதிபதி வண. பானகல உபதிஸ்ஸ தேரரின் அழைப்பின் பேரில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜப்பானிய பாராளுமன்றத்தில் கதோரி பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதி யதகாவா ஹஜீம் மற்றும் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் ரொட்னி பெரேரா ஆகியோர் தலைமையில் வைபவம் இடம்பெற்றது. அது ஜப்பானின் சவாராஹி லங்கா ஜீ விகாரையில் உள்ளது.

ஜப்பானின் முதல் தேரவாதி இலங்கை பௌத்த விகாரையான லங்கா ஜீ விகாரை 1984 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி பானகல உபதிஸ்ஸ தேரரின் அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்தின் விளைவாக நிர்மாணிக்கப்பட்டது.
ஜப்பானில் முதல் தேரவாத விகாரை நிர்மாணிக்கப்பட்டு நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஆலயம் 1984 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுடன் இணைந்து ஜப்பானில் உள்ள சவாராஹி லங்கா ஜீ விகாரை தொடர்பாக உருவாக்கப்பட்ட இணையத்தளம் லங்கா ஜீ விகாரையின் விகாராதிபதி அதி வணக்கத்துக்குரிய பானகல உபதிஸ்ஸ தேரரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பின்னர் லங்கா ஜீ விகாரை தொடர்பாக இந்தியாவின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷகீல் சித்திக் எழுதிய நூல் பானகல உபதிஸ்ஸ தேரர் மற்றும் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாழ்த்துச் செய்தியை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்த்துச் செய்தியை ரஞ்சித் வீரசிங்கவும் சமர்ப்பித்தனர்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,

ஜப்பானில் ஒரு மத மையத்தை நிறுவுவது எளிதானது அல்ல. அதற்கென பிரத்தியேக திட்டம் உள்ளது. வெளிநாட்டவர் அந்தச் சான்றிதழைப் பெறுவது மிகவும் கடினம். ஆனால் ஜப்பானிய அரசாங்கம் அந்த கௌரவமான அங்கீகாரத்தை லங்கா ஜீ விகாரைக்கு வழங்கியுள்ளது. அதனால் இன்று எங்களுக்கு ஜப்பானில் எந்த இடத்திலும் இந்த விகாரையின் கிளைகளை அமைக்க அனுமதிக்கப்படுகிறோம். இது இலங்கையர்களான எமக்குக் கிடைத்த கெளரவமான வெற்றியாகும்.

இலங்கையைத் தவிர, பொருளாதார ரீதியாக பலமான தேரவாத பௌத்த நாடுகள் இருந்தாலும், ஜப்பானில் முதல் தேரவாத பௌத்த விகாரையை நிர்மாணிக்க முடிந்தமை எமக்குக் கிடைத்த கௌரவமாகும். பௌத்தர்கள் மட்டுமல்ல. கத்தோலிக்கர்களும் கிறிஸ்தவர்களும் கூட வருகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களாகிய எமது பிக்குகளே ஜப்பானில் உள்ள அனைத்து சிங்கள தமிழ் முஸ்லிம்களையும் நல்லிணக்கத்துடன் வாழ வழிகாட்டுகிறார்கள்.
ஜப்பானில் உள்ள ஒவ்வொரு இலங்கையர்களும் இலங்கையர்களாகவே நினைக்கிறார்கள், மதப் பின்னணியுடன் அல்ல. லங்கா ஜீ விகாரை வெறும் விகாரை அல்ல. இது ஒரு பௌத்த மையம், ஒரு கல்வி மையம் அதுபோல் கல்வி மற்றும் பல்வேறு படிப்புகளுக்காக ஜப்பானுக்கு வருபவர்களின் இல்லமாக இது மாறியுள்ளது. எனவே, ஜப்பான்-இலங்கை நட்புறவின் உண்மையான பாலம் இந்த விகாரை என்று கூறுவது சரியானது.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தும் தூதுவர் சேவை இலங்கை ஜீ விகாரையில் இருந்து நடைபெறுவதாக கூறுவது சரிதான். ஜப்பான் இலங்கையின் நல்ல நண்பன். அந்த நட்பை எப்போதும் மதிப்போம்.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :