மரணித்த ஈரான் ஜனாதிபதி விடயத்தில் கண்கெட்டுப்போன ஊடகங்கள்ரணித்த ஈரான் ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்பட்டது மட்டுமல்லாது இறுதி வரைக்கும் மக்கள் அபிமானம் பெற்ற தலைவராக இருந்ததற்கு அவரது மரணச்சடங்கில் லட்சக்கணக்கான மக்கள் அழுதவாறு திரண்டது அதற்கு சாட்சியாகும்.
ஆனால் மேற்குலகு சார்பு ஊடகங்களின் கண்களுக்கு அவ்வாறு மக்கள் திரண்டது புலப்படவில்லை. மாறாக யாரோ சிலரை தேடிப்பிடித்து பேட்டியெடுத்து மக்கள் மகிழ்ச்சி அடைவதாக செய்திகளை வெளியிட்டுள்ளது.
நாங்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். அதாவது இலங்கையின் இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் மரணித்து அவரது உடலை காட்சிப்படுத்தியபோது இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல உலக தமிழர்கள் அனைவரும் கவலையடைந்தனர்.
ஆனால் சிங்கள தரப்பினர் மகிழ்ச்சி கொண்டாடியதுடன் விடுதலைப் புலிகளினால் தண்டனை பெற்றவர்களும், சில மாற்று தமிழ் இயக்கத்தினர்களும் அவரது மரணத்தையொட்டி மகிழ்ச்சியடைந்தனர்.
அதுபோலவே இப்ராஹீம் ரைசியின் மரணத்தினால் ஈரானிய இஸ்லாமியர்கள் மற்றும் உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் வாழ்கின்ற இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது மாற்று மதத்தவர்களும் தங்களது கவலையை வெளிப்படுத்தினர்.
ஆனால் இப்ராஹீம் ரைசி அவர்கள் நீதிபதியாக இருந்தபோது அவரால் தண்டனைபெற்ற குற்றவாளிகளின் உறவினர்களையும் மற்றும் கடும்போக்கு அமெரிக்கா, இஸ்ரேல் சார்பான ஈரானிய எதிர்ப்பாளர்களையும் தேடிப்பிடித்து கண்டுபிடித்து அவர்களது பேட்டியை ஊடகங்களில் வெளியிட்டதன் மூலம் இவ்வாறான ஊடகங்களின் சுயரூபத்தை அறிந்துகொள்ள முடிகின்றது.
சதாம் ஹுசைன் தூக்கிலடப்பட்டபோது உலகமே அழுதது அதுபோல் மகிழ்சியை வெளிப்படுத்தியவர்களும் இருந்தார்கள்.
பெரும்பான்மை எது என்பதனை புறம்தள்ளிவிட்டு, தங்களுக்கு வாசியாக எது இருக்கின்றதோ அவ்வாறான விரல்விட்டு எண்ணக்கூடியவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்குகின்ற நாசகார ஊடகங்கள் இருக்கும் வரைக்கும் இந்த உலகில் அமைதியை ஏற்படுத்தவோ, உண்மையை வெளிப்படுத்தவோ முடியாது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :