திருகோணமலை முத்துநகர் கிராம மக்களின் குடியிருப்பு, விவசாய காணிகளை வெளி நாட்டுக்கு மற்றும் தனியார் நிறுவனத்திற்கு இலங்கை துறைமுக அதிகாரசபையின் மூலம் வழங்கப்பட உள்ளதாக முத்துநகர் கிராம மக்கள் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூபின் கவனத்திற்கு கொண்டு வந்ததுக்கு அமைவாக முத்துநகர் கிராமத்திற்கு சென்று பொதுமக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை அண்மையில் நடத்தியிருந்தார்.
நமது மாவட்ட பூர்வீக காணிகளையும் நமது மக்கள் வாழ்ந்த்துவரும் நிலத்தினையும் நமது மக்களின் வாழ்வாதார விவசாய காணிகளையும் வெளிநாட்டவர்களுக்கு கூறு போட்டு விக்கும் அரசின் ஒரு சதித்திட்டமாகவே இதனை பார்க்கவேண்டியுள்ளது.
இன்று பல தசாப்தங்களாக மக்கள் வாழ்ந்துவருகின்ற முத்துநகர் கிராமம் போன்ற மக்களுக்கு அரசினால் ஒரு குடும்பத்துக்கு தொந்தமாக 10 பேர்ச் காணித்துண்டு வழங்க முடியாத இந்த அரசாங்கம் தற்பொழுது வெளிநாட்டவர்களுக்கு அபிவிருத்தி என்ற பெயரில் 100 ஏக்கர் காணியினை நீண்ட கால குத்தைக்கு வழங்க திட்டமிட்டுவருகிறது.
மக்களின் பூர்வீக காணிகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்புடன் நான் பல்வேறு பட்ட முன்னெடுப்புகளை செய்து வருகின்றேன் அதில் ஒரு அங்கமாக நேற்று (29) திருகோணமலை மாவட்ட இலங்கை துறைமுக அதிகார சபையின் பிராந்திய முகாமையாளர் வீரசிங்க அவர்களை நேரில் சந்தித்து முத்துநகர் நகர் மற்றும் SLPA (வராயா) குடியிருப்பு காணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடினேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் குறிந்த சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment