காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி வீதியில் அமைந்துள்ள பாலத்தை திருத்தி தருமாறு மக்கள் கேட்டுள்ளனர்.அஸ்ஹர் இப்றாஹிம்-
காரைதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட விபுலானந்தா மத்திய கல்லூரிக்கு செல்லும் கார்பட் வீதியில் தோணா ஆற்றுக்கு மேலாகவுள்ள பாலம் பழுதடைந்து பல வருடமாகியும் இதுவரை திருத்தப்படாமல் இருப்பது எதிர்காலத்தில் பாரிய அனர்த்தமொன்றை ஏற்படுத்தலாம் என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இந்த வீதி கார்பட் வீதியாக புனருத்தானம் செய்யப்பட்ட போது இது விடயமாக பலர் எடுத்துரைத்தும் அதனையும் பொருட்படுத்தாமல் இவ் வீதி செப்பனிடப்பட்டது.
இவ் வீதியின் மேலாக கனரக வாகனங்கள் செல்லும் போது இப் பாலத்தில் அதிர்வை அதிர்வை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

எனவே,சம்பந்தப்பட்ட வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் இப்பாலத்தை திருத்தி இப்பாலத்தினூடாக பயமின்றி பயணிக்க உதவுமாறு மக்கள் கேட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :