மதுபான அனுமதிப் பத்திரங்களுக்காக, பதவிகளுக்காக தீர்மானம் எடுப்பவர்கள் எங்களிடம் இல்லை.-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச



டிஜிட்டல் இலங்கையை கட்டியெழுப்புவதாக அரசாங்கம் கூறிக்கொண்டிருந்தாலும், வெதமுலன ராஜபக்சர்களின் வளவ்வவுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் கூட இணைய வசதிகள் இல்லை. தாமரை கோபுரங்களை அமைப்பதற்கு முன்னர் இப்பாடசாலைகளுக்கு இணைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான எந்த ஏற்பாடுகளும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மதுபான அனுமதிப் பத்திரங்கள், மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள், சலுகைகள், சிறப்புரிமைகள் மற்றும் பொருளாதார நன்மைகள் குறித்து சிந்தித்து பல்வேறு நபர்கள் பல்வேறு முடிவுகளை எடுக்க முடியும். இந்த நாசகார செயற்பாடுகளை முன்னெடுக்கும் நபர்களுடன் பயணிக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சுகபோகங்களை அநுபவிக்க முடியாது. மக்களுக்காக சேவையாற்ற வேண்டும். தலைவர் என்ற முறையில் இதில் நான் முன்னுதாரணமாக செயற்படுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 210 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, முல்கிரிகல, கோனதெனிய மகா வித்தியாலத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 30 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, பாடசாலைக்குத் தேவையான ஆங்கில மொழிப் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலியும் வழங்கி வைக்கப்பட்டது.

🟩 தேசியப் பாதுகாப்பு என்பது இராணுவ பாதுகாப்பை விடவும் மேலானது.

கல்வி, சுகாதாரம், விவசாயம், வருமான மூலங்கள், தொழில்முனைவு போன்றவை நாட்டின் தேசிய பாதுகாப்பை நேரடியாகப் பாதிப்பதால், அது பாதுகாக்கப்பட்டு, மக்கள் நலனை வலுவடையச் செய்ய வேண்டும். தேசிய பாதுகாப்பு என்பது இராணுவப் பாதுகாப்பு மட்டுமல்ல, அதற்கும் அப்பாற்பட்ட ஒன்று என்பதால், இந்த பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்களின் மூலம் அது பலப்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :