இன்று காரைதீவில் வைகாசிப் பொங்கலுக்கான மடிப்பிச்சை நிகழ்வு ! நாளை அதிகாலை அம்மன் திருக்குளிர்த்தி!!வி.ரி.சகாதேவராஜா-
ரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்ச்சி சடங்கின் பாரம்பரிய வைகாசிப் பொங்கலுக்கான மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வு இன்று(20) திங்கட்கிழமை நடைபெறவிருக்கிறது.

இன்று பிற்பகல் ஆலயத்தில் பாரம்பரிய உரலில் நெல் குற்றும் சடங்கும் இடம்பெறும். தொடர்ந்து பொங்கல் இடம்பெறும். இன்று பாரிய கடைத்தெரு மற்றும் இறுதி நாள் சடங்கும் இடம்பெறும். இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் உள்ளூர் வெளியூர்களிலிருந்து ஆலயத்திற்கு வருகை தருவார்கள்.

இதேவேளை, கடந்த ஐந்து தினங்களாக ஆயிரக்கணக்கான அடியார்கள் மத்தியில் பகல் 1மணிக்கு பூசையும் மாலை 7மணிக்கு உடுகு குழல் ஓசை முழங்க பக்தி பூர்வமாக சடங்குப்பூசையும் ஊர்சுற்றுக்காவியம் பாடலும் இடம்பெற்று வந்தன.

இச் சடங்கு கடந்த (13) திங்கட்கிழமை மாலை கடல் நீர் எடுத்து, கல்யாண கால் முறித்து நடுதலுடன் ஆரம்பமானது.

நாளை (21) செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும்.
எட்டாம்சடங்கு 27ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 7மணிக்கு இடம்பெறும் என ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :