வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நீர்ப்பாசன கட்டமைப்புக்களை புனரமைக்கும் பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் பார்வையிட்டார் !



நூருல் ஹுதா உமர்-
வ்வருட ஆரம்பத்தில் அம்பாறை மாவட்டம் பலத்த வெள்ளப்பெருக்கை சந்தித்து விவசாய நீர்ப்பாசன கால்வாய்கள், அணைக்கட்டுகள் பாரிய சேதத்தை சந்தித்தது. இந்த விடயத்தை ஜனாதிபதி, விவசாய அமைச்சர், நீர்ப்பாசன அமைச்சர் ஆகியோரை சந்தித்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் விளக்கி அசௌகரியத்திற்குள்ளாகியுள்ள விவசாயிகளின் நன்மை கருதி உடனடியாக அணைக்கட்டுக்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தார்.
அது தொடர்பில் முன்னேற்றங்கள் பற்றி ஆராயும் களவிஜயமொன்றை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் மேற்கொண்டு சம்மாந்துறை பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் திரு வேல் கஜன் அவர்களிடம் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும், வீரையடி, செங்கல்பட்டு அணைகளின் நிலைகள் மேலும் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஏனைய அணைகளின் நிலைகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் அதிகமாக பாதிக்கப்பட்ட அணைகளை நீர்ப்பாசன திணைக்களம் 90 சதவீதமளவில் சீரமைத்துள்ள விடயங்களையும் பார்வையிட்டார்.
இன்னும் மீதமாக உள்ள வேலைகளை அவசரமாக முன்னெடுக்க தேவையான நிதியை நீர்ப்பாசன அமைச்சரிடம் பேசி பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும், சம்மாந்துறை பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் முன்வைத்த விவசாயிகளின் ஏனைய பிரச்சினைகளை தீர்க்க விவசாய அமைச்சருடனும், பொறுப்புவாய்ந்த அமைச்சின் அதிகாரிகளுடனும் பேசி உடனடி நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் உறுதியளித்தார்.
இந்த கள விஜயத்தில் வட்ட விதானை ஏ.எல். தஸ்லீம், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் நௌபர் ஏ. பாவா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :