ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாடு!ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பேராளர் மாநாடு 22.06.2024 காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் நடாத்துவதற்கு கட்சியின் உச்சபீடம் தீர்மானித்துள்ளது.

இதற்கு அமைவாக அம்பாறை மாவட்ட பேராளர்கள் கலந்து கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் கலைக்கப்பட்ட வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான A.L.அப்துல் மஜீட்( முழக்கம்) அவர்களின் தலைமையில் அவரது இல்லத்தில் இன்று (30.05.2024) நடைபெற்றது. இந்நிகழ்வில்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி செயலாளர் நாயகம் மன்சூர் ஏ காதர், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான M.S. உதுமாலெப்பை (JP) மற்றும் அம்பாறை மாவட்ட குழுவின் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமானA.C.சமால்டீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் 18 கிராமங்களில் அமைந்துள்ள 227 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்தும் பேராளர்களை அழைப்பது எனவும் பேராளர் மாநாட்டில் கலந்து கொள்ளும் பேராளர்களை பிரதேச மட்ட அமைப்பாளர்களும் கிராமிய அமைப்பாளர்களும் கலந்துரையாடி பெயர்ப்பட்டியலை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமிற்கு அனுப்பி வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :