கொக்கிளாயில் சந்நதி-கதிர்காம பாதயாத்திரை குழுவினர். இன்று திருமலை புல்மோட்டை பிரவேசம்




வி.ரி.சகாதேவராஜா-
லங்கையின் மிக நீண்ட பாதயாத்திரையான சந்நதி- கதிர்காமம் பாதயாத்திரை ஜெயாவேல்சாமி தலைமையிலான குழுவினர் 12 நாட்களின் பின்னர் (23) வெள்ளிக்கிழமை கொக்கிளாயை அடைந்தனர்.

வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இரு தினங்கள் தங்கியிருந்து சற்று ஓய்வெடுத்து பின்னர் மீண்டும் (21) செவ்வாய்க்கிழமை மீண்டும் யாத்திரையை ஆரம்பித்தார்கள்.

பாதயாத்திரைக் குழுவினர் கொக்கிளாய் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டையில் பிரவேசிக்க உள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (11) இலங்கையின் மிக நீண்ட பாதயாத்திரை யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமானது தெரிந்ததே.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :