ஜனாதிபதியின் அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது.- அமைச்சர் பிரசன்ன ரணதுங்க



நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் பாராளுமன்ற விவாதத்தை நடத்த தயார் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கு தேவையான விளக்கங்களை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் விவாதம் ஏற்பட்டது.

சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சித் தலைவர் - கௌரவ சபாநாயகர் அவர்களே, ஜனாதிபதி கடந்த காலத்தைப் போலவே இன்றும் இந்தச் சபைக்கு தகவல்களை வழங்கினார். சிலர் சவால்களை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் தான் இந்த நாட்டை நிபந்தனையின்றி ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் எப்படிக் குறிப்பிட்டாலும் இன்று நாட்டில் ஒரு புதிய இயல்பு நிலை உருவாகியுள்ளது என்பதை இந்த நேரத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு பதிலாக, நாட்டின் பொருளாதாரம் சுருங்கி விட்டது. மக்களின் வாழ்க்கை சுருங்கிவிட்டது. மக்கள் பெரும் அழுத்தத்தில் உள்ளனர். வறுமை, வேலையில்லா திண்டாட்டம், எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ளது. தொழில்கள் நலிவடைந்துள்ளன. ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது. நாட்டில் பல அச்சுறுத்தல்கள் இருப்பதாக சர்வதேச நிறுவனங்கள் கூட அறிக்கைகளை வழங்கியுள்ளன.

அஸ்வெசும நலன்புரித்திட்டம் ஒரு நேர்மறையான திட்டம் அல்ல. பொருளாதார வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை இல்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணம் வழங்கப்படுகிறது. அதை நாங்கள் தவறு என்று சொல்லவில்லை. ஜனாதிபதி பதவியேற்ற உடனேயே நாட்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். அதன் மூலம் ஒரு குடும்பத்தின் வருமானம் குறித்த புரிதலை பெற முடியும். அந்த புரிதலுடன் இந்த நலப்பணிகளை செய்திருக்கலாம். இன்றைய நிலை என்ன? கடன் மறுசீரமைப்பு திட்டம் மந்தமாக இயங்குகிறது.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (ஸ்ரீ.பொ.பெ.) - கௌரவ சபாநாயகர் அவர்களே, இது விவாதத்திற்கு செல்கிறது. எனவே ஜனாதிபதியின் உரை குறித்து விவாதம் நடத்தலாம். நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் உண்மைகளை தெளிவுபடுத்த நீங்கள் அவகாசம் கேட்டீர்கள். இப்படிச் சென்றால் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க - கௌரவ சபாநாயகர் அவர்களே, இந்தச் சபையில் பல்வேறு கருத்துக்கள் நிலவுவதால் இது தொடர்பில் விவாதம் நடத்தினால் நல்லது. மேலும் இதற்கெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர்தான் பொறுப்புக் கூற வேண்டும். அவர் பிரதமர் பதவிக்கு வந்தால், இது எதுவும் நடக்காது. என்னால் முடிந்ததைச் செய்தேன்.

சபையோர் சிரிக்கிறார்கள்)

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன - கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, இனியும் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச - எமக்கு ஏன் பேச்சு சுதந்திரம் இல்லை?, எங்களால் பேச முடியாதா? பாரபட்சமாக இருக்காதீர்கள். உண்மைகளை முன்வைக்க என்னை அனுமதியுங்கள். என்னை வாயை மூடச் சொல்லாதீர்கள்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன -

உண்மைகளை தெளிவுபடுத்த சந்தர்ப்பம் கேட்டீர்கள். பேசச் செல்லும்போது தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும்.

(சபை கூச்சல்)

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார - கௌரவ சபாநாயகர், ஜனாதிபதி அவர்கள் உரை நிகழ்த்தினார். அதுபற்றி நேரடியாக விளக்கம் கேட்டாலும் பரவாயில்லை. அரை மணி நேரத்திற்கும் மேலாக பேசி உண்மைகளை விளக்கி உள்ளார். யார் இந்த ஜனாதிபதி? எதிர்க்கட்சித் தலைவர் யார்? எப்படி சொல்வது என்று தெரியவில்லை.

ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (ஸ்ரீ.பொ.பெ) கௌரவ சபாநாயகர் அவர்களே, இது ஒரு விளக்கமல்ல. ஒரு கதை. ஜனாதிபதி சபையை விட்டு வெளியேறும் போது எதிர்க்கட்சித் தலைவர் பயப்படப் போகின்றீர்களா எனக் கேட்டார். அனுரகுமார திஸாநாயக்கவும் எதிர்க்கட்சித் தலைவரை விவாதத்திற்கு அழைத்தபோது அதையே கேட்டார். அந்த ஆட்கள் வாதிட்டாலும் பரவாயில்லை. இந்த நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த வாய்ப்புக் கொடுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :