நற்பிட்டிமுனையில் கல்விச் சாதனையாளர்கள் கெளரவிப்பு.



வி.ரி. சகாதேவராஜா-
ற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசராலயம் சேனைக் குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய நிருவாக சபை இணைநங நடாத்தும் மாணவர்களுக்கான கெளரவிப்பு மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வானது ஆலய தலைவர் த.ரவிராஜ் தலைமையில் நேற்று முன்தினம் நற்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு அதிதிகளாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்கின் பக்கீர், பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படை தலைமை அதிகாரி சி.எஸ். ரத்நாயக்க, மற்றும் அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி, நற்பிட்டிமுனை ஆலயங்களின் தலைவர்கள்,செயலாளர்கள்,பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள்,பொது அமைப்புக்கள் விளையாட்டு கழகங்கள், என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் தரம் 5ம் ஆண்டு புலமைப் பரீட்சை, க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை, உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான நினைவுச் சின்னம் பணப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு சீருடையினை நிதிப் பங்களிப்பினை ஏ. யோகராஜ், கே.தேவகுமார் ஆகியோர் வழங்கிருந்தனர்.
மேலும் வருகை தந்த அதிதிகளினால் மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் பணப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :