கல்குடா தொகுதியில் 80 பேர் உட்பட ஆயிரம் பேருக்கு இலவச கண் சத்திர சிகிச்சை!



எச்.எம்.எம்.பர்ஸான்-
லவச கண் சிகிச்சை முகாமொன்று ஞாயிற்றுக்கிழமை (5) மீராவோடை தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் அனுசரணையில் பாக்கிஸ்தான் வைத்தியர் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட இவ் கண் பரிசோதனை முகாமில் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் கலந்து கொண்டனர்.
இதில், கண்ணில் வெள்ளை படர்தல் நோயினால் பாதிக்கப்பட்ட கல்குடா தொகுதியைச் சேர்ந்த 80 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு இனங்காணப்பட்ட நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமா இந்த வாரம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் மேலும் தெரிவித்தனர்.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கண் சிகிச்சை முகாமில் இனங்காணப்பட்ட சுமார் ஆயிரம் பேருக்கு காத்தான்குடியில் இலவச சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக வைத்தியர் குழுவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :