ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ரின் கருத்து கிழ‌ட்டு ந‌ரியின் க‌டைசி கையாலாகாத‌ன‌மாக‌ தெரிகிற‌துபாறுக் ஷிஹான்-
கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் ஒன்று ப‌ட்டால் பேர‌ம் பேசும் ச‌க்தியை பெற‌லாம் என‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் கூறியிருப்ப‌து கிழ‌ட்டு ந‌ரியின் க‌டைசி கையாலாகாத‌ன‌மாக‌ தெரிகிற‌து என‌ "புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ்' தெரிவித்துள்ள‌து.

இது ப‌ற்றி அக்க‌ட்சியின் சிரேஷ்ட‌ ஆலோச‌க‌ர் முபாற‌க் முப்தி தெரிவித்திருப்ப‌தாவ‌து,

2000ம் ஆண்டு முழு கிழ‌க்கு மாகாண‌ முஸ்லிம்க‌ளும் ர‌வூப் ஹ‌க்கீம் த‌லைமையிலான‌ முஸ்லிம் காங்கிர‌சுட‌ன் ஒன்றிணைந்து மிக‌ப்பெரிய‌ பேர‌ம் பேசும் ச‌க்தியாக‌ அக்க‌ட்சியை மாற்றின‌ர்.

அத‌ன் பின் என்ன‌ ந‌ட‌ந்த‌து? ஹ‌க்கீமும் அவ‌ரின் க‌ட்சியின‌ரும் அமைச்சு ப‌த‌விக‌ளையும் சேர்ம‌ன் ப‌த‌விக‌ளையும் பேர‌ம் பேசி கிழ‌க்கு மாகாண‌ முஸ்லிம்க‌ளை ந‌ட்டாற்றில் கை விட்ட‌ன‌ர்.

ஆனாலும் கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் மீண்டும் 2001லும் முழுமையாக‌ ஒற்றுமைப்ப‌ட்டு ஹ‌க்கீமை ப‌ல‌ப்ப‌டுத்தின‌ர். என்ன‌ ந‌ட‌ந்த‌து? மூதூர் அழிக்க‌ப்ப‌ட்ட‌து. வாழைச்சேனையில் ஜ‌னாஸாக்க‌ள் எரிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. புலிக‌ளுட‌னான‌ பேச்சுவார்த்தையில் த‌னித்த‌ர‌ப்பை கூட‌ பேர‌ம் பேச‌ முடியாத‌ அள‌வு அமைச்சுப்ப‌த‌விக‌ளுக்கு சோர‌ம் போயிருந்தார் ஹ‌க்கீம்.

அமைச்ச‌ராக‌ ப‌ல‌ த‌ட‌வைக‌ள் ப‌த‌வி வ‌கித்த‌ ஹ‌க்கீமினால் இன்று வ‌ரை கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் ஒரு உரிமையையும் பெற்ற‌தில்லை.

இவ்வாறு கிழ‌க்கு முஸ்லிம்க‌ளை ஏமாற்றி அவ‌ர்க‌ளின் வாக்குக‌ளை த‌ன‌தும் த‌ன‌து ச‌காக்க‌ளின‌தும் உல்லாச‌ வாழ்க்கைக்கு பேர‌ம் பேசும் துரோக‌த்தை செய்து இள‌மையில் எதையும் ச‌மூக‌த்துக்கு செய்யாத‌ வ‌ந்த‌ ர‌வூப் ஹ‌க்கீம் இப்போது வ‌ய‌தான‌ கால‌த்தில் கிழ‌க்கு முஸ்லிம்க‌ளின் வாக்குக‌ளை வைத்து பேர‌ம் பேசுவோம் என்ப‌து இள‌மை முத‌ல் ச‌மூக‌த்தை ஏமாற்றிய‌ கிழ‌ட்டு ந‌ரியின் க‌டைசி த‌ந்திர‌மாகும்.

கிழ‌க்கு முஸ்லிம்க‌ள், முஸ்லிம் காங்கிர‌சை முழுமையாக‌ தோற்க‌டிக்காத‌வ‌ரை கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் ஹ‌க்கீமினால் ந‌ன்மைக்கு ப‌தில் தீமையையே தொட‌ர்ந்தும் காண்ப‌ர் என
புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :