மனோ கிளிநொச்சி, ராதா கொழும்பு, திகா தலவாக்கலை <தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களின் மே தின பங்கு பற்றல்>



மிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், கிளிநொச்சியில் நடைபெறும் தமிழர் ஐக்கிய மே தின ஊர்வலத்தில் மற்றும் தமிழ் தேசிய மே தின விழாவில் சிறப்பு பேச்சாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் அழைப்பை ஏற்று கலந்து கொள்கிறார். கூட்டணியின் பிரதி தலைவர் வே. இராதாகிருஷ்ணன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதியாக, கொழும்பில் நடைபெறும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் மே தின விழாவில் கலந்து கொள்கிறார். கூட்டணியின் பிரதி தலைவர் பிரதி தலைவர் பழனி திகாம்பரம் தலவாக்கலையில் நடைபெறும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி ஊடகங்களிடம் கூறியுள்ளதாவது,

மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் உலா நமது கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரை கொழும்பில் நடைபெறும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் மே தின விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறேன். மத்திய, ஊவா மாகாணங்களில் வாழும் நமது கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரை தலவாக்கலையில் நடைபெறும் மே தின கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறேன். கிளிநொச்சி, வன்னி உட்பட வடமாகாணத்தில் வாழ்கின்ற நமது கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரை கிளிநொச்சியில் நடைபெறும் தமிழர் ஐக்கிய மே தின ஊர்வலத்தில் மற்றும் தமிழ் தேசிய மே தனி விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறேன்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :