நாராயணப்பிள்ளை நாகேந்திரன் எழுதிய நாட்டார் வழக்காறுகள் நூல் வெளியீட்டு விழா



அஸ்ஹர் இப்றாஹிம்-
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பங்கேற்புடன் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் கலாசார பேரவை மற்றும் கலாசார அதிகார சபையும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த எழுத்தாளரும்,ஓய்வுபெற்ற அதிபருமான நாராயணபிள்ளை நாகேந்திரன் எழுதிய நாட்டார் வழக்காறுகள் எனும் நூலின் வெளியீட்டு விழா மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்ணம் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் பிரதம அதிதியாகவும், சிவஸ்ரீ சண்முகம் மயூரவதன குருக்கள் பிரதம குருவாகவும், களுவாஞ்சிகுடி முகாமை ஆலய பரிபாலனசபைத் தலைவர்.கந்தவேல மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கணேஷன் மதிசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாவும், களுதாவளை மகா வித்தியாலய அதிபர் கணபதிப்பிள்ளை சத்தியமோகன் மற்றும் களுதாவளை வினாயகர் வித்தியாலய அதிபர் நாராயணப்பிள்ளை நடேசன் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :