சம்மாந்துறையில் மாபெரும் பாரம்பரிய கலை விழா. இண நல்லிணக்க நிகழ்வு.எம்.எம்.றம்ஸீன்-
கிழக்கு இளைஞர்கள் அமைப்பு, றிஸ்லி முஸ்தபா கல்வி அபிவிருத்தி அமைப்பு மற்றும் MYOWN நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாரம்பரிய கலை நிகழ்வு சம்மாந்துறை பொது மைதானத்தில்
கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் தலைவர், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தானீஸ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக றிஸ்லி முஸ்தபா கல்வி அபிவிருத்தி அமைப்பின் தலைவர், மயோன் நிறுவனத்தின் பணிப்பாளர் றிஸ்லி முஸ்தபா கலந்து சிறப்பித்தார்.
கெளரவ அதிதியாக அம்பாறை மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.தெளபீக் அவர்களும், சிறப்பு அதிதிகளாக
சம்மாந்துறை பிரதேச கலாசார உத்தியோகத்தர் றஸ்மி மூஸா,
றிஸ்லி முஸ்தபா கல்வி அபிவிருத்தி அமைப்பின் செயலாளர், திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர், சம்மாந்துறை கோரைக்கார் தமிழ் மகா வித்தியாலய அதிபர் எஸ்க.எலங்கோபன், கவிதாயினி டொக்டர் ஜெலீலா முஸம்மில், மற்றும் கலை மன்றங்களின் தலைவர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :