இலங்கை - இந்திய சமுதாய பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம் – பேரவையின் புதிய தலைவர் அமைச்சர் ஜீவன் தொண்டமான்



லங்கை - இந்திய சமுதாய பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம் (SLICC 2024) அண்மையில் கொள்ளுப்பிட்டி ரேணுகா ஹோட்டலில் ராஜூ சிவராமன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பேரவையின் புதிய தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவுசெய்யப்பட்டார்.
இலங்கை, இந்தியாவுக்கிடையிலான வர்த்தக மற்றும் கலாசார ரீதியிலான நகர்வுகளுக்கான உறவு பாலமாக திகழும் முக்கிய அமைப்பே இதுவாகும்.

இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் முன்னாள் தலைவர் சிவராமன் மற்றும் பேரவையின் உயர்மட்ட உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரமே தலைமைப்பதவியை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஏற்றுள்ளார்.

இந்த நிகழ்வில் போசகர் ராஜூ சிவராமன், பொருளாளர் கே. செல்வகுமார், பொதுச்செயலாளர் அருணாச்சலம் பால்ராஜ், இலங்கை - இந்திய சமுதாய பேரவையின் காப்பாளரும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் பத்திரிகை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான குமார் நடேசன் என பலரும் கலந்துக் கொண்டனர்.





இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார, வர்த்தக தொடர்புகளை மேலும் விரிவாக்குவது, இளம் தொழில் அதிபர்களை உருவாக்குவது மற்றும் இளம் தொழில் முனைவோரை அடையாளம் காணும்போது மலையகத்தில் உள்ள தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் அளித்தல் உள்ளிட்ட விடயங்கள் பற்றி இந்த இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளன.





ஊடக செயலாளர்

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :