இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக கல்முனை பிராந்திய கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அவர்களும் விஷேட அதிதியாக மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் அவர்களின் புதல்வர் எம்.ஏ.என். சுஹாத் ஹம்டி அவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின்போது அஷ்செய்க் ஏ.கே.எம். சமீர் அவர்கள் துஆ பிராத்தனை நடாத்தினார்.
முன்னாள் அதிபர் மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் அவர்களது நினைவாக ‘அடையாளம்’ எனும் பெயரில் நினைவு மலரின் அறிமுக உரையை ஏ.எம். அஹுவர் ஆசிரியர் அவர்கள் நிகழ்த்தினார்.
பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் தாணீஸ் ரஹ்மதுல்லாஹ் உள்ளிட்ட சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் வை. ஹபிபுல்லாஹ், பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச். ஜாபீர், சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்வி பணிப்பாளர் அரபாத் முஹிதீன், முன்னாள் பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், பாடசாலை ஸ்தாபக அதிபர் ஏ.எம். இப்ராஹீம், பாராளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பாடல் செயலாளர் நூருல் ஹுதா உமர், அரச உயர் அதிகாரிகள், பிராந்திய பாடசாலைகளின் முன்னாள் மற்றும் இந்நாள் அதிபர்கள், அரச உயர் அதிகாரிகள், மர்ஹூம் ஏ.எல்.எம்.ஏ. நளீர் அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், கல்முனை பிராந்திய கல்வி காரியாலயத்தின் உயர்மட்ட உறுப்பினர்கள் அரசியல் பிரமுகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் நலன்விரும்பிகள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.

0 comments :
Post a Comment