மயிலத்தமடு, மாதவனை பிரச்சனையானது சில மாதங்களில் பூதாகரமாக மாறும்!- பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்ன்றைய தினம் 29.04.2024 இடம் பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது.
பிரச்சனையில் மாவட்ட செயலகம் கொழும்புக்கு தகவல்களை வழங்கும் ஓர் வேலையே செய்தது அன்றி வேறொன்றும் இல்லை. மயிலத்தமடு, மாதவனையில் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. அதன் போது. மயிலத்தமடு, மாதவனையில் கொல்லப்பட்ட மாடுகளுக்கான நிவாரணம் பண்ணையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதற்கான முன்மொழிவு என்னால் வழங்கப்பட்டிருந்தது இருப்பினும் இவை தொடர்பான தகவல்கள் மாவட்ட அரச திணைக்களங்களினால் சரியான முறையில் அனுப்பப்படவும் இல்லை வழங்கப்படவும் இல்லை. வரட்சியான காலம் என்பதினால் ஓர் சிலரே அங்கு காணப்படுகின்றார்கள் ஆனால் இன்னும் சில மாதங்களில் பலர் அங்கு காணப்படுவர் இதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அல்லாதுவிடில் இன்னும் சில மாதங்களில் இவ் பிரச்சனையானது பூதாகரமாக மாறும் நிலைமை ஏற்படும்.

அடுத்ததாக செங்கலடி பிரதேச செயலக பிரிவில் கூட சில பல அரசியல் வாதிகளின் பின்னணியில் பல சட்ட விரோத காணி அபகரிப்புகள் நடந்துவருகின்றது. புளுட்டுமானோடையில் ஓர் அரசியல் வாதியின் பின்புலமுள்ளவர்கள் காணி பிடிப்பதினை சென்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் குறிப்பிட்டிருந்தேன். இன்னும் சில காணிகள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இயந்திரங்களின் துணையோடு காணிகளை துப்புரவு செய்து கையகப்படுத்துவது இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :