ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரிகள் உருவாக வேண்டும்- ஆசிரியர் மர்ஹூம் ACM. பழீல்ரு நாட்டின் எதிர்கால தலைவர்களாகிய மாணவர் சமூகத்தை செதுக்குவதில் ஆசிரியர்களின் வகிபாகம் இன்றியமையாததாகும். இவ்வாறாக மாணவர்களின் நலனுக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்து 2024.02.27ம் திகதி மறைந்த மர்ஹூம் ACM. பழீல் ஆசிரியர் என அழைக்கப்படும் ACM. இப்றாகிம் ஆசிரியர் என்றால் மிகையாகாது.

மர்ஹூம் ACM. பழீல் ஆசிரியர் அவர்கள் இலங்கை திருநாட்டின் கிழக்குமாகாணம்,அம்பாரைமாவட்டத்தில் அமைந்துள்ள கல்முனை நகரில் அப்துல் கரீம் மற்றும் பாத்தும்மா ஆகியோருக்கு 1966ம் ஆண்டு ஜனவரி மாதம் மாதம்15ம் திகதி தமது இறுதி புதல்வராக பிறந்தார். பழீல் ஆசிரியர் அவர்களுக்கு 04 சகோதரர்களும் 02 சகோதரிகளும் உள்ளனர்.ஜனாபா. அக்மல் ஜஹான் அவர்களை திருமணம்செய்து 01 ஆண் பிள்ளையின் தந்தை ஆவார்கள்.

தனதுஆரம்பக்கல்வியை கல்முனை அஸ் ஸூஹறா வித்தியாலயத்திலும் இடை நிலை மற்றும் உயர்தர கல்வியை கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையிலும் கற்றார்கள். 1988ம் ஆண்டில் க.பொ.த (உஃத) பரீட்சையில்கலைப்பிரிவில் சித்தியடைந்து 1989ம் ஆண்டு பேராதெனிய பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.பல்கலைக்கழத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் சிறப்பு கற்கை நெறியை பயின்று அதேபல்கலைக்கழத்தில் அரசியல் விஞ்ஞான முதுமானி கற்கைநெறியையும் பூர்த்தி செய்தார்கள்.அதன் பின்னர் Dip.in. Education, பேராதனைப்பல்கலைக்கழகத்தில் Dip.in. Human Rights மற்றும் Dip.in.Sp.Education ஆகிய கற்கை நெறிகளை பூர்த்திசெய்தார்கள்.

மர்ஹூம் ACM. பழீல் அசிரியர் அவர்கள் தனது முதலாவது ஆசிரியர்நியமனத்தை தான் கல்வி கற்ற கல்முனை சாஹிறா தேசிய பாடசாலையில் 1994ம் ஆண்டு பெற்றுக்கொண்டார்கள். அப்பாடசாலையில் தொடர்ச்சியாக சுமார் 24 வருடங்கள் அளவையியலும் விஞ்ஞானபாடத்தை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார்கள். அதன்பின்னர் 2017ம் ஆண்டு முதல் தான்மரணிக்கும் வரை கமு/சது/ மத்திய கல்லூரி (தேசிய)பாடசாலையில்ஆசிரியராக பணி புரிந்தார்கள். அதேபோன்று கல்முனை ஹாமியா அரபுக் கல்லூரியில் அரசியல்விஞ்ஞான பாட வருகை தரு விரிவுரையாளராக பணிபுரிந்தார்கள். Logic பழீல் ஆசிரியர் என பரவலாக அழைக்கப்பட்டாலும் அரசறிவியல்பாடத்துறையில் நன்கு தேர்ச்சிமிக்கவராக திகழ்ந்தார்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரிகள் உருவாக வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தனையின் வெளிப்பாடாக 1993ம் ஆண்டுமார்ச் மாதம் 08ம் திகதி சாய்ந்தமருது அல் - கமறுன் வித்தியாலயத்தில் கல்முனை வெளிவாரிபட்டப்படிப்பு கற்கை நிலையத்தை தோற்றுவித்து பேராதனை பல்கலைக்கழகத்தினுடைய வெளிவாரிபட்டதாரிகள் தென்கிழக்கு பிராந்தியத்தில் தோற்றம் பெறவும் அரச தொழில் வாய்ப்புக்களைபெற வழிகாட்டியவராவார். இக்கற்கை நிலையத்தின் மூலமாக சுமார் 900 வெளிவாரி பட்டதாரிகள்பட்டம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மர்ஹூம் ACM. பழீல் அசிரியர் எழுத்துதுறையில் மிகவும் பாண்டித்துவம் பெற்றவராக மிளிர்ந்தார்கள். விசேடமாக அரசறிவியல் துறையில்மாத்திரமின்றி அளவையியலும் விஞ்ஞான முறையும் குடியுரிமைக் கல்வி மற்றும் வரலாறு ஆகிய பாடங்களில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைபெறும் முகமாக சுமார் 50க்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்கள்.
மர்ஹூம் ACM. பழீல் அசிரியர் தனது மாணவர் பருவ காலத்தில்சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாணவர் காங்கிரஸின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராகசெயற்பட்டார்கள். இக்காலகட்டத்தில் மறைந்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஆர்ஆ.அஷ்ரப் அவர்களுடன் இணைந்து கட்சியை பலப்படுத்துவதற்காக அயராது பாடுபட்டார்கள். மேலும் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தனதுமாணவர்கள் சக ஆசிரியர்கள் மற்றும் ஏனையவர்களுடன் மிகவும் பண்பாக நடந்து கொள்பவர்.

இவ்வாறான நிலையில்வல்ல இறைவன்; மர்ஹூம் ACM. பழீல் அசிரியர் அவர்களை இவ்வுலகை விட்டு மண்ணறை வாழ்வுக்காக கடந்த 2024.02.27ம் திகதிஅன்று அழைத்துக் கொண்டான். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். வல்ல இறைவன்அன்னாரது பாவங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்குவனாகஆமீன்.

மர்ஹூம் ACM. பழீல் அசிரியர் அவர்களின் 40ம் நாள் நினைவு தினமான2024.04.05ம் திகதியை முன்னிட்டு இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது.


Mr. MYM.Yoosuff Imran (SLTS)
BA (Hons) Spl in Political Science
MA (Political Science) UPDN
LLB (R) OUSL
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :