ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தியும், பெருந்தோட்டக்கம்பனிகளின் அராஜக போக்கை கண்டித்தும் மலையக நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுப்புக.கிஷாந்தன்-
லையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தியும், பெருந்தோட்டக் கம்பனிகளின் அராஜக போக்கை கண்டித்தும் மலையக நகரங்களில் இன்று (21.04.2024) போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சிவில் அமைப்புகள் மற்றும் நகர வர்த்தகர்கள் தரப்பில் இருந்தும் பேராதரவு வழங்கப்பட்டது.

நகர் பகுதிகளில் கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டதுடன். நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன், கொட்டகலை, டிக்கோயா, பொகவந்தலாவை, மஸ்கெலியா, டயகம, அக்கரப்பத்தனை, நானுஓயா, இராகலை உள்ளிட்ட நகரங்களில் இ.தொ.காவின் ஏற்பாட்டில் சம்பள உயர்வுக்கான அழுத்தம் கொடுக்கும் போராட்டங்கள் இடம்பெற்றன.

பதுளை மாவட்டத்தில் பதுளை, பசறை, ஹாலிஎல, ஹப்புத்தளை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றன.

கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி, புசல்லாவ, மடுல்கலை, உளுகங்கை, ரங்கல உள்ளிட்ட பகுதிகளிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் பலாங்கொடை பின்னவல, கஹாவத்தை, இறக்குவானை உள்ளிட்ட நகரங்களிலும், மாத்தளை நகரில் மற்றும் களுத்துறை மத்துகம பகுதியிலும், அவிசாவளை உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டங்கள் இடம்பெற்றன.

இ.தொ.காவின் அரசியல் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், தொழிலாளர்கள், செயற்பாட்டாளர்கள் பலர் போராட்டங்களில் பங்கேற்றிருந்தனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :