2024 நமது நாட்டில் ஒரு திருப்பத்திற்கான மாற்றம் நிகழும் வருடமாகும். இதில், ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையையும் உள்ளடக்கிய தேசிய போசணைக் கொள்கை அமுல்படுத்தப்படும். தாய்மார்கள், சிசுக்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்களை ஒருங்கிணைத்து தேசிய போஷாக்கு திட்டம் முதற்தடவையாக சகல மட்டங்களும் உள்ளடங்கும் விதமாக அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பெண்களின் சுகாதாரத் துறைக்கு முதல் முன்னுரிமை அளித்து, இந்நாட்டில் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்காக இலவச ஆரோக்கியத் துவாய் உள்ளிட்டவை தேவைப் பொதி வழங்கும் திட்டம் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி, கொழும்பு ஏ.ஈ.குணசிங்க மைதானத்தில் ஏற்பாடு செய்த, கொழும்பு மாநகர சபை எல்லைப் பகுதிக்குட்பட்ட 2500 தாய்மார்களுக்கு தலா 20 கிலோ வீதம் அரிசிப் பொதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
போதிய வசதிகள் இன்மையினால் ஆரோக்கியத் துவாய் சுகாதார பாதுகாப்பு உற்ப்பத்திகளை உரியவாறு பாவிக்க முடியாத பல இலட்சக்கணக்கான பெண்கள் உள்ளனர். ஸ்கொட்லாந்து மற்றும் நியூசிலாந்து போன்று நாடுகள் தேசிய முன்னுரிமை திட்டமாக இதனை நடைமுறைப்படுத்தி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
ஊட்டச்சத்து குறைபாட்டின் குறிகாட்டிகளான குறைந்த எடை கொண்ட குழந்தைகள், குறைந்த எடையுடன் கூடிய பிறப்பு, வளர்ச்சி குன்றியிருத்தல், இரத்த சோகை போன்ற குறிகாட்டிகளை நாம் புரிந்து கொண்டுள்ளோம். பெண்கள், சிசுக்கள்,
குழந்தைகள், மற்றும் இளைஞர்களுக்கான தேசிய போசாக்கு கொள்கையை, நிபுணர்கள் மற்றும் கள நிலவர ஆய்வுகளைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும்.மாற்றத்தை நாடும் இந்த வருடத்தில் ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கி, நாட்டுக்கு நலவுகளை ஏற்படுத்தும் பயணத்தில் அனைவரையும் ஒன்றிணையுமாறும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment