ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தை உருவாக்குதல் தம்பலகாமத்தில் கலந்துரையாடல்ஹஸ்பர் ஏ.எச்-
கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடலானது தம்பலகாமம் பிரதேச சபை மண்டபத்தில் இன்று (07)இடம் பெற்றது. இதனை அகம் மனிதாபிமான வளநிலையம் (AHRC ) ஏற்பாடு செய்திருந்ததுடன்.45 நாட்களுக்கு ஒரு முறை இக் கலந்துரையாடல் இடம் பெற்றுவருகிறது. இதில் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியை உள்ளடக்கிய சிவில் சமூக உறுப்பினர்கள்,இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகள்,உள்ளூர் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் தங்களது கிராமங்களில் காணப்படும் சமூக மட்ட பிரச்சினைகளை உள்ளூர் அதிகார சபைகள் ஊடாக மக்கள் பங்கேற்பின் மூலமான தீர்வுகளை பெற்றுக் கொண்டு சமூகத்தை விழிப்படையச் செய்வது தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றது. 

இதன் போது தம்பலகாமம் பிரதேச சபை மூலமாக ஜயபுர பகுதியில் கொட்டப்படும் கழிவு காரணமாக துர் நாற்றம் வீசுதல்,யானைகளின் நடமாட்டம் அதிகரிப்பு,அப்பகுதியில் கிரவல் அகழ்வு உள்ளிட்ட பிரச்சினைகளை ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்து இதன் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச சபை செயலாளருக்கு முன்வைக்கப்பட்டிருந்தது.
குறித்த இக் கலந்துரையாடலில் தம்பலகாமம் பிரதேச சபை செயலாளர் B.U.A.S உடகெதர ,அகம் மனிதாபிமான வள நிலையத்தின் திட்ட இணைப்பாளர்,கள இணைப்பாளர்,சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள்,உள்ளூர் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :