நாட்டில் சுற்றுலா விசாவில் வர்த்தகம் செய்யும் ரஷ்யர்கள் தொடர்பபில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் பணிப்புசுற்றுலா வீசாக்களுடன் இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் ரஷ்ய பிரஜைகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வாறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாயின் அவர்கள் வர்த்தக விசாவை பெற்றிருக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

காலி இமதுவ பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்று (06) இமதுவ பிரதேச செயலகத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர்.

அஹங்கம பிரதேசத்தில் ரஷ்யர்களே அதிகளவான வர்த்தகத்தை மேற்கொள்வதாக எழுந்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட போது அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரால் பொலிசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இமதுவ மற்றும் ஹபராதுவ ஆகிய பிரதேங்களுக்கான ஒதுக்கீட்டில் இமதுவைக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு அங்கு 1,850 மீற்றர்களுக்கு கார்பட் ஈடும் பணியை மேற்கொண்டதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்

"தற்போது உள்ளுராட்சி மன்றங்கள் மூலம் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு பணம் பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இமதுவ பிரதேச செயலகப் பிரிவில் சுற்றுலா அபிவிருத்திகள் தொடர்பில் முன்மொழிவுகளை மாகாண சபைகள் அமைச்சின் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

எமது அமைச்சினால் கட்டுமாணத்துறை தொழிலுக்கு அதிக சம்பளத்தில் இஸ்ரேலுக்கு செல்லக்கூடியவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கஷ்டப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.
அஸ்வெசும திட்டத்தில் 24 இலட்சம் குடும்பங்களில் 15 இலட்சம் குடும்பங்கள் பயன் பெறுகின்றன. அத்துடன் நாட்டில் முடங்கப்பட்டு இருந்த அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

டொலரின் விலை குறைந்து, வெளிநாட்டில் இருந்து வரும் பணம் அதிகரித்தது, ஏற்றுமதி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் மின் கட்டணத்தையும், எரிபொருள் விலையையும் மேலும் குறைக்கலாம் என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :