சென்னை அமெரிக்க மத்திய நிலையத்துடன் இணைந்து ஊடக எழுத்தறிவு தொடர்பான செயலமர்வினை நடத்திய யாழ்ப்பாண அமெரிக்க மத்திய நிலையம்யாழ்ப்பாணம், மார்ச் 15, 2024 - யாழ்ப்பாண அமெரிக்க மத்திய நிலையம், சென்னை அமெரிக்க மத்திய நிலையத்துடன் இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை சென்னையிலுள்ள மாணவர்களுடன் மெய்நிகர் நிலையில் இணைத்து ஒரு ஊடக எழுத்தறிவு தொடர்பான செயலமர்வினை மார்ச் 15ஆம் தேதி நடத்தியது. ஊடகப் பயிற்றுவிப்பாளரும் Yourstory Tamil இன் ஆசிரியருமான இந்துஜா ரகுநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில், இன்றைய சிக்கலான ஊடகத் தளத்தில் பயணிப்பதற்கு இன்றியமையாத திறன்களான போலிச் செய்திகளைக் கண்டறிதல், விமர்சன ரீதியாக சிந்தனை செய்தல், பக்கச்சார்புகளை இனங்காணுதல் மற்றும் உண்மைகளைப் பரிசீலிக்கும் அடிப்படை நுட்பங்களில் தேர்ச்சியடைதல் போன்ற விடயங்களில் 22 இலங்கை மற்றும் தென்னிந்திய மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் சொனெக், கிழக்கு மற்றும் வட மாகாணங்களுக்கான தனது ஐந்து நாள் விஜயத்தின் போது, கருத்துச் சுதந்திரத்தினைப் பாதுகாப்பதில் அமெரிக்கா கொண்டுள்ள அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் ஊடக எழுத்தறிவு வகிக்கும் இன்றியமையாத பங்கு ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இம்மாணவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். “தவறான தகவல்கள் கரைபுரண்டோடும் ஒரு உலகில், போலிச் செய்திகளிலிருந்து உண்மையைப் புரிந்துகொண்டு பிரித்தறிவதென்பது முன்னெப்போதையும் விட மிகமுக்கியமானது” என பிரதித் தூதுவர் சொனெக் குறிப்பிட்டார். எல்லை தாண்டிய அறிவுப் பரிமாற்றத்தைப் பேணிவளர்ப்பதிலும், இளைஞர்களிடையே ஊடகப் புரிதலை மேம்படுத்துவதிலும் இச்செயலமர்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர் “ஊடக எழுத்தறிவு தொர்பான பயிற்சியை அமெரிக்கா ஆதரிக்கிறது, ஏனெனில் இது சிக்கலான தகவல் தளத்தில் பயணிப்பதற்கும், தகவலறிந்த குடிமக்களை போஷிப்பதற்கும் ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துவதற்கும் இன்றியமையாத திறன்களை தனிநபர்களுக்கு வழங்குகிறது.” எனவும் தெரிவித்தார்.

அமெரிக்க தூதரகத்தின் அமெரிக்க மத்திய நிலையங்களின் வலையமைப்பு பற்றி: யாழ்ப்பாண அமெரிக்க மத்திய நிலையமானது கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்குரிய அமெரிக்க மத்திய நிலையங்களின் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இவ்வலையமைப்பானது கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள அமெரிக்க மத்திய நிலையங்களை உள்ளடக்கியதாகும். இம்மத்திய நிலையங்கள் அவற்றிற்கு வருகைதரும் விருந்தினர்கள் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் விரிவுரைகள் ஊடாகவும், புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் சஞ்சிகைகள் ஊடாகவும் அமெரிக்காவைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் அமெரிக்காவுடன் தொடர்புகொள்வதற்குமான வரவேற்கத்தக்க சூழல்களை வழங்குகின்றன. பொதுவான மற்றும் உலகளாவிய நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பான ஊடாட்டங்களை மேற்கொள்வதற்காக அனைத்து வகையான தரத்தினைச்சார்ந்த இலங்கையர்களும் அறிவுப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கும் ஒத்துழைப்பதற்கும் ஒன்றிணைவதற்கான தளங்களாக இவ்வமெரிக்க மத்திய நிலையங்கள் விளங்குகின்றன. விரிவான வளங்கள் மற்றும் சமூக ஈடுபாட்டிற்கான அணுகலை வழங்குவதன் ஊடாக கல்விரீதியான வளர்ச்சி, கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் சமூக அபிவிருத்தி ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக இம்மத்திய நிலையங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. மெய்நிகர்நிலையிலும் நேரடியாகவும் ஒரு பரந்த அளவிலான ஊடாடும் நிகழ்ச்சிகளை அமெரிக்க மத்திய நிலையங்கள் ஏற்பாடு செய்கின்றன. ஆங்கில மொழி தொடர்பான செயலமர்வுகள், தொழில்முனைவு தொடர்பான வழிகாட்டல்கள், அமெரிக்காவில் உயர்கல்வியைத் தொடர்வது பற்றிய தகவல்களை வழங்கும் அமர்வுகள் அல்லது அமெரிக்கக் கொள்கை, சமூகம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான முழு வீச்சிலான கலந்துரையாடல்கள், திரைப்படத் திரையிடல்கள் மற்றும் கதை சொல்லும் அமர்வுகள் என அனைவரும் ஈடுபடக்கூடிய ஏதாவதொன்று இம்மத்திய நிலையங்களில் நடைபெறுகிறது.

மேலதிக தகவல்களுக்கும் எதிர்கால நிகழ்வுகள் தொடர்பான விபரங்களுக்கும் சமூக ஊடகங்களில் எமது அமெரிக்க மத்திய நிலையங்களைப் பின்தொடரவும்:

Facebook.com/AmCenterSL
Facebook.com/AmericanCornerKandy
Facebook.com/AmCornerJaffna
Facebook.com/AmericanCornerMatara
Facebook.com/AmericanCornerBattiஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :