"உங்களால் உங்கள் வீட்டுக்கு பெருமை" பெண் ஆளுமைகள் கெளரவிப்பு



நூருல் ஹுதா உமர்-
"உங்களால் உங்கள் வீட்டுக்கு பெருமை" எனும் தொனிப்பொருளில் சிலோன் மீடியா போரம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்திலுள்ள "பெண் ஆளுமைகள் 09 பேரை வீடு தேடிச் சென்று கெளரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை இடம்பெற்றது.

சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் தலைமையில் இரு கட்டங்களாக இக்கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

முதற்கட்டமாக காலையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டமுதுமானி சஹ்பி எச்.இஸ்மாயில் கலந்து கொண்டார். இரண்டாம் கட்டமாக மாலையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பொலன்நறுவ மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள பிரதம பொறியியலாளர் எந்திரி எம்.எஸ்.எம். நவாஸ் கலந்து கொண்டார்.

இதன்போது மருத்துவம், கவிதை, கட்டுரை, எழுத்து, ஊடகம் மற்றும் கல்வித்துறையில் பிரகாசிக்கும் பெண் ஆளுமைகளான அல்-ஸுஹரா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ். ரஜினுல் மஜீதியா, கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் நஸ்மியா சனூஸ், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஸஹிலா இஸ்ஸதீன், சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப். றிகாஸா ஷர்பீன், அல்-அக்ஷா வித்தியாலய பிரதி அதிபர் ஏ. றெஜினா, சிறுவர் உரிமை பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம். கஸ்பியா வீவி, அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.எப். சுமைய்யா, எம்.ஐ.ஹைறுன் நிஸா ஆகியோரை வீடு தேடிச் சென்று சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், பிரதித் தலைவர் எம்.வை. அமீர், பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பிரதிச் செயலாளர் எம்.எம்.ஜபீர் உள்ளிட்ட குழுவினர் சான்றுப்பத்திரம் மற்றும் அன்பளிப்பு பரிசுகள் வழங்கி கெளரவித்தனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :