மன்னார் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் சாய்ந்தமருதைச் சேர்ந்த ஐ.அலியார் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்!அஸ்ஹர் இப்றாஹிம்-
ன்னார் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் ஐ . அலியார் தனது 30 வருட அரச சேவையின் பின்னர் ஓய்வு பெற்றார்.

சமுர்த்தி முகாமையாளராக 1994 ல் நியமனம் பெற்ற ஐ.அலியார் தனது தொடரான விடாமுயற்சி, அற்பணிப்பு என்பவற்றின் காரணமாக அம்பாரை மாவட்ட இணைப்பாளர் , உதவிப் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர் என பதவி உயர்வுகள் பெற்று சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்கள தலைமைக் காரியாலயத்தில் பல்வேறு பிரிவுகளிலும் கடமையாற்றி , மன்னார் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக நான்கு வருடங்கள் கடமையாற்றிய நிலையில் ஓய்வு பெறுகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது.

சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட சமுர்த்திப் பணிப்பாளர் ஐ.அலியார் அவர்கள் வடக்கு , கிழக்கு பிரதேசங்களில் சமுர்த்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் , சமுர்த்திப் பயனாளிகளை வலுவூட்டுவதிலும் தனது அளப்பரிய பங்களிப்பினை தலைமைக் காரியாலயத்தில் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில் வழங்கியுள்ளமை பாராட்டத் தக்கதாகும்.

தனது சேவைக்காலத்தில் சமுர்த்தித் திணைக்கள அதிகாரிகளினால் ஆளுமையும், ஆற்றலும் , திறமையும் , கடமையில் அற்பணிப்பும் மிக்க ஒருவராக அடையாளப் படுத்தப்பட்டதுடன் சிறந்த பயிற்றுவிப்பாளராகவும், வளவாளராகவும் செயற்பட்டு வடக்கு கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களில் பல பயிற்சிப்பட்டறைகளை நடாத்தியுள்ளமை குறிப்பத்தக்கதாகும்.

திணைக்களத்தினால் வெளியிடப்படும் பல சிங்கள மொழிமூல சுற்றறிக்கைகளை தமிழ் மொழி மாற்றம் செய்து வழங்கியமை , வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் கடமையாற்றும் திணைக்கள அதிகாரிகளுக்கு சிறந்த முறையில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு காரணமாக அமைந்திருந்தது..

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் பேரதெனிய பல்கலைக்கழக கலைப் பட்டதாரியுமாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :