கொழும்பு கொட்டாஞ்சேனை சேதீட்ரல் கல்லூரிக்கு கொடுத்த வாக்குறுதியை உடன் நிறைவேற்றினார் கலாநிதி ஜனகன்..!



கொழும்பு கொட்டாஞ்சேனை சேதீட்ரல்(ஆண்கள்) கல்லூரி அதிபர்  கடந்த வாரம் கல்லூரியில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கலாநிதி ஜனகன் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கல்லூரியின் நிற பூச்சு வேலை திட்டத்திற்கான வேண்டுகோளை உடனே ஏற்றுக் கொண்டு ஒரு வாரத்தில் தனது சொந்த நிதியில் இருந்து ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் அவர்கள் ஜனனம் அறக்கட்டளையின் கல்விக்கு கரம் கொடுப்போம் திட்டத்தின் ஊடாக மூன்று லட்சம் ரூபாய் பெறுமதியான காசோலையை கல்லூரிக்கு நேரில் சென்று கல்லூரி அதிபரிடம் வழங்கி வைத்தார். 

இன் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உட்பட முக்கியஸ்தர்களான றிஸ்கான் முகம்மட், முகம்மட் றிஸ்வி, முகம்மட் ஹசன், விஜய் குமார், அனுசன் (BRO) ஆகியோர் கலந்து கொண்டனர்

இங்கு உரையாற்றிய கலாநிதி ஜனகன் அவர்கள் கூறியதாவது இப் பணிகள் அரசியலுக்காகவோ, எனது தனிப்பட்ட தேவைகளுக்காகவோ நான் மேற்கொள்ளவில்லை கல்வியின் ஊடாகத்தான் ஒரு சமூகத்தை கட்டி எழுப்ப முடியும் என்பது எனது நம்பிக்கை அந்த அடிப்படையில் கல்விக்காக எனது சொந்த நிதியில் இருந்து பல்வேறு வேலை திட்டங்களை செய்து வருகின்றேன். அது எதிர்காலத்தில் சிறந்த ஒரு கல்விச் சமூகத்தை உருவாக்கும் என நம்புகிறேன் அவ்வளவுதான் என்று தெரிவித்தார். அத்துடன் கல்லூரியின் முக்கிய தேவையான இத் தேவையை பூர்த்தி செய்த கலாநிதி ஜனகன் அவர்களுக்கு பழைய மாணவர்களும்,பெற்றோர்களும் தங்களின் நன்றிகளை தெரிவித்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :