பைந்தமிழ் உறவுப்பாலம் மூலம் மண்டூர் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!வி.ரி.சகாதேவராஜா-
பைந்தமிழ் உறவுப்பாலம் வேலைத்திட்டத்தின் கீழ் மண்டூர் 14, சக்தி மகாவித்தியாலய ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு புத்தகப்பைகள் உட்பட்ட 6 இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் கல்முனை றொட்டரிக்கழகத்தினால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு கல்முனை றொட்டரிக் கழக தலைவர் ஏ எல் ஏ. நாசர் தலைமை தாங்கினார். மேலும் பாடசாலை அதிபர் எஸ் .சௌசன், றோட்டரியன் மு.சிவபாதசுந்தரம், றொட்டரியன் எம் அமிர்தசங்கர் ஆகியோரும் பங்குபற்றினர்.

இதற்கான நிதி உதவி ஐக்கிய இராச்சியம் நியூமோல்டனிலுள்ள சறே தமிழ் கல்விக்கூடச் சமூகத்தினால் வழங்கப்பட்டுள்ளதுடன் அதன் முக்கிய பிரதிநிதி அரிராஜசிங்கம் மகீதரனும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.

இதற்கான அனுசரணை Assist RR அமைப்பினால் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :