65 மீற்றர் வீட்டுத்திட்டம் பகிர்ந்தளிப்பதில் மேற்கொள்ளப்பட்ட மோசடி -பத்திரிகையாளர் முகம்மட் ஜெஸீலுக்கு பாராட்டு தெரிவிப்புருதமுனையில் சர்ச்சைக்குரியதாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் 65 மீற்றர் வீட்டுத்திட்டம் பகிர்ந்தளிப்பதில் மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து குற்றவாளிகள்ளும் தராதரம் பார்க்காமல் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என கல்முனை மாநாகர சபையின் முன்னாள் உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தருமான பி.சர்மில் ஜஹான் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சில செய்திகள் சமூக ஊடகங்களில் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனையில் சர்ச்சைக்குரியதாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் 65 மீற்றர் வீட்டுத்திட்டம் பகிர்ந்தளிப்பதில் மோசடி தொடர்பில் மேற்கண்டவாறு ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்துள்ளதாவது

அம்பாறை மாவட்டம் மருதமுனையில் சர்ச்சைக்குரியதாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் 65 மீற்றர் வீட்டுத்திட்டம் தொடர்பான விடயம் சம்மந்தமாக நான் சிலவரிகள் எழுதுவது சாலப்பொருந்தும் என எண்ணுகிறேன். அண்மையில் கல்முனை பிரதேச செயலாளர் லியாகத் அலியினால் பகிர்ந்தளிக்கப்பட்ட வீடுகளில் அம்பாறை அரசாங்க அதிபர், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ,கல்முனை பிரதேச செயலாளர், முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள் , தனவந்தர்கள், என தொலைபேசி உரையாடல் பதிவுகள் மூலம் இலஞ்ச ஊழல் செய்தவர்களின் பட்டியல் நீண்கொண்டே செல்வதனையிட்டு கவலை அடைகின்றேன்.

இந்த விடயங்களை முதன் முதலில் வெளிக்கொணர்ந்தவர் பத்திரிகையாளர் முகம்மட் ஜெஸீல் . பலவாறான அச்சுறுத்தல்கள் எதிர்ப்புகளுக்கு நடுவில் இவ்வாறான ஊழல்வாதிகளின் முகத்திரையை கிழித்திருப்பதென்பது எல்லோராலும் வரவேற்கப்படுகிறது. அந்தவகையில் இதுபோன்ற விடயங்களில் துணிச்சலுடன் செயற்படும் ஊடகவியலாளரை பாராட்டுக்கின்றேன். நாம் அனைவரும் ஊடகவியாளர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.தற்போது உருவாக்கப்பட்டுள்ள மருதமுனை ஊடக பேரவை இவ்விடயம் குறித்து மௌனம் சாதித்து வருவது பெரும் ஏமாற்றத்தை எமக்கு அளிக்கின்றது.மக்களின் உரிமைகளுடன் விளையாடுகின்ற ஊழல் வாதிகளை வெளி உலகத்திற்கு வெளிக்காட்டுவதற்கு ஊடகம் சார் அமைப்புகள் முன்வர வேண்டும்.சுயநலமாக இவ்விடயத்தில் பேரவை ஈடுபடாமல் குறித்த செய்தியாளரின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவதுடன் இவ்விடயம் குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.

அத்தோடு இனிவரும் காலங்களில் இவ்வாறான ஊழல் தொடர்பான விடயங்களை வெளிக்கொணரும் முயற்சியில் நானும் ஒருத்தனாக செயற்பட உள்ளேன். அது மாத்திரமன்றி இலஞ்சம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தமான சில ஆதாரங்கள் என்னிடம் உண்டு. அவைகளையும் சகோதரர் ஜெஸீலுக்கு அனுப்பி வைக்கவுள்ளேன். ஊடகங்களுக்கும் அனுப்பிவைக்க உள்ளேன் எனவே இவ்வாறான குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். மக்கள் பணத்தை கொள்ளையிட்ட கொள்ளையர், ஏழைக்குடும்பங்களின் வாழ்க்கையோடு விளையாடிய ஊழல்வாதிகளுக்கு மக்களாகிய நீங்கள் சரியான தீர்ப்பினை வழங்க வேண்டும்.
அத்தோடு அலிபின் ரஸாதி என்ற போலி முகநூல் ஆரம்பத்தில் இருந்து எப்போது ஒரு துரும்பு கிடைக்கும் என அலைந்த அலி பின் ரசாதி இயக்குனர் கள் இந்த 65 மீற்றர் வீடு இலஞ்ச ஊழல் தொடர்பான குரல் பதிவுகள் என்னிடம் இருக்கின்றது என்பதை அறிந்துகொண்டு வெளிநாட்டில் இருக்கும் என்னைத் தொடர்புகொண்டு அவற்றை அனுப்பி வையுங்கள் இவர்களிடம் நல்ல டீல் ஒன்றைப் பேசி பெற்றுக்கொண்டு வாழக்கையில் செற்றில் ஆகிவிடுவோம் எனகேட்க நான் மறுத்தேன் ஆனாலும் அவற்றை எவ்வாறோ சகோதரர் ஜெஸீல் மக்கள் மத்தியில் வெளிக்கொண்டுவந்து விட்டார்.எனவே தேவையற்ற விடயங்களை பேசுவதை நிறுத்தி சம்பந்தப்பட்ட ஊழல் வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க சகல தரப்பினரும் முன்வர வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :