களைகட்டியது தென் கிழக்கு பல்கலைக்கழகம்!லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா இன்று 2024.02.10 ஆம் திகதி பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் பட்டமளிப்பு விழா மண்டபத்தில் மிக கோலாகலமாக ஆரம்பமானது.

இன்றைய இந்நிகழ்வுகள் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களது நெறிப்படுத்தலிலும் பதிவாளர் எம்.ஐ. நௌபர் அவர்களது நிர்வாகத்தின் கீழும் பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபா அவர்களது தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.

பட்டமளிப்பு விழாவின் முதல் அமர்வின் விஷேட பேச்சாளராக; அமெரிக்க-இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் புதிய நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

முதலாம் நாளின் முதலாவது அமர்வில் கலை கலாசார பீடத்தைச் சேர்ந்த 342 பட்டதாரிகளும் இரண்டாவது அமர்வில் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 355 பட்டதாரிகளும் மூண்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்பவியல் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த 430 பட்டதாரிகளும் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இன்றைய தினத்தில் கலை கலாச்சார பீடத்திலிரிந்து


2016/2017 ஆம் கல்வி ஆண்டில் அரசியல் மற்றும் சமாதான கற்கைதுறையில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம். எல்.ஏ. காதர் விருதை முகம்மது அமீர் மர்யம் பெற்றுக்கொண்டார். அத்துடன்

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் தமிழ் துறையில் சிறந்த மாணவருக்கான பேராசிரியர் கைலாசபதி ஞாபகார்த்த விருதை முஹம்மட் அலி றீஷா நூர் சுவீகரித்தார்.

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் ஹிந்து கலாச்சார துறையில் சிறந்த மாணவருக்கான புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஞாபகார்த்த விருதை வனிதா உதயகுமார் பெற்றுக்கொண்டார்.

இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்த்தின் சார்பில்

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் இஸ்லாமிய சிந்தனைகள் மற்றும் நாகரிகம் என்ற துறையில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம்.ஏ. எம். சுக்ரி ஞாபகார்த்த விருது நூறுல் ஸிபா ஜாபீறுக்கு வழங்கப்பட்டது.

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி துறையில் சிறந்த மாணவருக்கான இஸ்மாயில் டீன் மரிக்கார் விருது செயினுல் ஆப்தீன் சாஜித் பெற்றுக்கொண்டார்.

மூன்றாவது அமர்வில் பிரயோக விஞ்ஞான பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மானர்களுக்கான பட்டங்கள் வழங்கப்பட்டன.

குறித்த அமர்வின்போது தொழில்நுட்பவியல் பீடத்தின் சிபார்சின் கீழ் கலாநிதி திலகரத்ன ஆராச்சிகே பியசிறி அவர்கள் கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பிரயோக விஞ்ஞான பீடத்திலிருந்து

2017/2018 ஆம் கல்வி ஆண்டில் விஞ்ஞானத்தில் சிறந்த மாணவருக்கான கலாநிதி எம். எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த விருதை டினூபமா சமதி ஹேவாகே பெற்றுக்கொண்டார்.

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் இரசாயன துறையில் சிறந்த மாணவருக்கான பேராசிரியர் சுல்தான்பவா ஞாபகார்த்த விருது வெடநாயக்க பிலிப்புல்லைய உமேஷா சுபுன்சாரி விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்டது.

பொறியியல் பீடத்தில்

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் பீடத்தில் சிறந்த மாணவருக்கான விருதை முகம்மது நுஷான் பாத்திமா நிfப்லா சுவீகரித்துக்கொண்டார்.

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் சிவில் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விரும் முகம்மது நுஷான் பாத்திமா நிfப்லாவுக்கே கிடைத்தது.

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் எலக்ரிகல் அண்ட் எலக்ட்ரோனிக் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விருது திசாநாயக்க முதியன்செலாகே சத்துமினி சாரிக்க திசாநாயக பெற்றுக்கொண்டார்.

2016/2017 ஆம் கல்வி ஆண்டில் மெகானிகல் இன்ஜினியரிங் துறையில் சிறந்த மாணவருக்கான விருது ஷியாட் முபீஸ் சாஹிபுக்கு வழங்கப்பட்டது.

பட்டமளிப்பு விழாவின் நேரடியாக ஒலி ஒளிபரப்பு பல்கலைக்கழக ஊடகப்பிரிவின் நேரடி கண்காணிப்பில் இதற்கென விஷேடமாக வடிவமைக்கப்பட்ட https://www.seu.ac.lk/conv24/ என்ற இணையத்தள பக்கத்தினூடாக ஒலி ஒளிபரப்புச் செய்யப்பட்டது விஷேட அம்ஷமாகும்.

நாளை 2024.02.11 நான்காவது ,ஐந்தாவது மற்றும் ஆறாவது அமர்வுகளில் வர்த்தக முகாமைத்துவ பீடம் மற்றும் வெளிவாரி பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :