இன்றைய நிகழ்வுகள் பதில் பதிவாளர் எம்.ஐ.எம். நௌபர் அவர்களது வழிகாட்டலில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களது தலைமையில் அரங்கேறியது.
இரண்டாம் நாளின் நான்காவது அமர்வில் முகாமைத்துவ வர்த்தக பீடத்தை சேர்ந்த 314 பட்டதாரிகளும் ஐந்தாவது அமர்வில் கலை கலாசார பீடத்தை சேர்ந்த வெளிவாரி பட்டதாரிகள் 350 பேரும் ஆறாவது அமர்வில் முகாமைத்துவ பீடங்களைச் சேர்ந்த வெளிவாரி பட்டதாரிகள் 361 பேரும் பட்டங்கள் பெற்றுக்கொண்டனர்.
இதனடிப்படையில் நேற்றும் இன்றுமாக 1441 உள்வாரி பட்டதாரிகளுக்கும் 711 வெளிவாரி பட்டதாரிகளுக்குமாக மொத்தம் 2152 பட்டதாரிகள் இந்த பட்டமளிப்பு விழாவின் போது பட்டங்களை பெற்று வெளியேறினர்.
நான்காவது அமர்வில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில்
2016/2017 ஆம் கல்வி ஆண்டில் முதுநிலை வணிக நிர்வாகத்தில் 09 பட்டதாரிகளும் 2016/2017 ஆம் கல்வி ஆண்டில் முகாமைத்துவ முதுகலை டிப்ளோமாவில் 09 பட்டதாரிகளும் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
2016/2017 ஆம் கல்வி ஆண்டில் வர்த்தக துறையில் சிறந்த மாணவருக்கான அல் ஹாஜ் ஏ.எம். இஸ்மாயில் ஞாபகார்த்த விருது ஜுனைடீன் பாத்திமா ஷனாவுக்கு கிட்டியது.
2016/2017 ஆம் கல்வி ஆண்டில் முகாமைத்துவ துறையில் சிறந்த மாணவருக்கான விருது முஹம்மட் அலியார் பாத்திமா ஜில்ஷா பெற்றுக்கொண்டார்.
நிகழ்வுகளின் போது பேரவை அங்கத்தினர்கள், பட்டமளிப்விழாக் குழு தலைவர் பேராசிரியர் எம்.பி.எம் இஸ்மாயில், பீடாதிபதிகள், நூலகர், பதில் நிதியாளர், பேராசிரியர்கள் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் ஊடக பிரிவினர், கல்விசாரா ஊழியர்கள் பட்டங்களை பெற்ற பட்டதாரிகள் அவர்களின் பெற்றோர் உறவினர்கள் என பல்கலைக்கழக வளாகம் நிறைந்து காணப்பட்டது.
0 comments :
Post a Comment