சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கென முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மர்ஹும் மயோன் முஸ்தபா அவர்களது ஞாபகார்த்தமாக அவரது புதல்வரும் கல்வி உதவி சமூக அமைப்பின் தவிசாளருமான எம்.எம். றிஸ்லி முஸ்தபா அவர்களின் நிதியுதவியுடன் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட அலுவலகக் கட்டடத் தொகுதி இன்று நாட்டின் 76வது சுதந்திர தின நிகழ்வுடன் திறந்து வைக்கப்பட்டது.
ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அப்துல் சலாம் அஸ்வரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தேசியக் கொடியினை ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளருடன் கல்வி உதவி சமூக அமைப்பின் தவிசாளர் எம்.எம். றிஸ்லி முஸ்தபா, சாய்ந்தமருது முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹிபத்துல் ஹரீம், சாய்ந்தமருது ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் எம்.எம். சலீம் (ஷர்க்கி) ஆகியோர் இணைந்து ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கான அலுவலகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.
இதன்போது அனுசரணையாளரான றிஸ்லி முஸ்தபா அவர்கள் ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை உறுப்பினர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன், சம்மாந்துறை உஸ்வா அமைப்பின் தலைவர் அஷ்ஷேய்க் எம். முஸ்தபா உட்பட பள்ளிவாசல்கள் நிர்வாகிகள், ஜம்மிய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பினர், நன்கொடையாளர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment