இலங்கையின் 76வது சுதந்திர தின விழா அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் விமரிசையாக கொண்டாடப்பட்டதுசியாத்.எம்.இஸ்மாயில், பட உதவி : வி.மாதவன்-
க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சுதந்திர தின நிகழ்வுகள் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப் தலைமையில் சுகாதார மேம்பாட்டுக்கான திறந்த கேட்போர் கூடமான (கிரவுன் காடனில்) இன்று(04) நடைபெற்றது.
இதன்போது ராணுவ வீரர்கள் உள்ளிட்ட நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் "புதிய தேசம் அமைப்போம்" எனும் தொனிப்பொருளில் தேசிய சுதந்திரத்தின் முக்கியத்துவத்தினை பிரதிபலிக்கும் வகையில் வைத்திய அத்தியட்சகரினால் விசேஷட உரை நிகழ்த்தப்பட்டதும் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில், வைத்தியசாலை நிபுணர்கள், வைத்தியர்கள், வைத்தியர்கள் குழு உறுப்பினர்கள், அனைத்து தர சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :