நிந்தவூர் “Y Two K” பகல் வேளை பாலர் பராமரிப்பு நிலையத்தின் விடுகை விழா : றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்



நூருல் ஹுதா உமர்-
நிந்தவூர் “Y Two K” பகல் வேளை பாலர் பராமரிப்பு நிலையத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான விடுகை விழா நேற்று (28) நிந்தவூர் கமு/கமு/ அல் - பதுரியா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

“Y Two K” நலன்புரி அமைப்பின் தவிசாளரும், “Y Two K” பாலர் பாடசாலையின் முகாமையாளருமான ஏ.எச்.எம். லாபிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாத் பதியுதீன் கலந்து சிறப்பித்திருந்ததுடன், விஷேட அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளருமான எம்.ஏ.எம். அஷ்ரப் தாஹிர் கலந்து சிறப்பித்திருந்தார்.

நிகழ்வில் அதிதிகளாக கமு/கமு/ அல்- பதுரியா வித்தியாலய அதிபர் திருமதி. அப்துல் ஜப்பார், நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஏ. அஷ்பர், நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஏ.எல். றியாஸ் ஆதம், ஓய்வு நிலை ஆசிரியர் எம்.ஏ. மசூர், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.எச்.எம். நாளிர், மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழுவின் தேசிய தொழில் தகைமை கணிப்பீட்டாளர் எம்.ஏ.எம். மாஹிர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :