இறக்காமம் 04 இல் அமைந்திருக்கும் மஸ்ஜிதுல் இக்றாம் பள்ளிவாசலுக்கு 1000 லீட்டர் கொள்ளளவைக் கொண்ட நீர்த் தொட்டி மற்றும் கிணற்றிலிருந்து நீரைத் தொட்டிக்கு பம்ப் செய்வதற்கான தண்ணீர் மோட்டார் பம்ப் தேவைப்பாடு இருந்த காரணத்தினால் இவற்றைப் பெற்றுத் தருமாறு பள்ளி நிருவாகிகள், முன்னாள் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினரான எம்.எல்.முஸ்மி (ரெஸ்டா அமைப்பின் தலைவர்) ஊடாக ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில்; ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் மிகவும் குறுகிய நாட்களுக்குள் குறித்த நீர்த் தொட்டி மற்றும் மோட்டார் பம்ப் என்பன பெற்றுக்கொடுக்கப்பட்டு பள்ளிவாசல் நிருவாகிகளிடம் பாவனைக்காக கையளித்து வைக்கப்பட்டன.
இதன்போது பவுண்டேசன் உறுப்பினர்களுடன், பள்ளித் தலைவர் ஐ.எல்.அனீஸ், ஆலோசகர் வீ.ரீ. ஹுஸ்னி, எஸ்.என்.சிறாஜ் மற்றும் ஏனைய பள்ளி நிருவாகிகள், ஸலாம் பள்ளித் தலைவர் ஏ.எச்.றபாஸ் (ஆசிரியர்), ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் ஏ.றியாஸ் (ஆசிரியர்), வட்டார உறுப்பினர்களான ஏ.சஜாத், எஸ்.எம்.சியாம், ஏ.எல்.றாயிஸ், எஸ்.எல்.அறூஸ், என்.நிப்றாஸ், வை.பீ. பஹீஜ் உட்பட ஏனைய உறுப்பினர்கள், ஜமாஅத்தினர்கள், மஹல்லாவாசிகள், ஊர் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment